நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், சாம்ரத்தஹலுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது.
சமீபத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மனிஷா
கொய்ராலா மும்பையில் தனியாக வசிக்கிறார். தற்போது மலையாள படமொன்றில்
நடித்து வருகிறார். மனிஷா கொய்ராலாவுக்கு
விருந்துகளில் பங்கேற்கும் பழக்கம் உண்டு. மும்பை நடிகர் - நடிகைகள் பலர்
பிறந்தநாள் மற்றும் படங்களின் வெற்றி விழாக்களை நட்சத்திர ஓட்டல்களில்
விருந்து கொடுத்து கொண்டாடுவது உண்டு. இவற்றில் மதுவும் பரிமாறப்படும்.
இதுபோன்ற விருந்துகளில் இனிமேல் பங்கேற்க மாட்டேன் என்று மனிஷா அறிவித்து
உள்ளார். இதுபற்றி அவர்
கூறியதாவது:- நான் ரொம்ப மாறிவிட்டேன். எதற்கும் ஆசைப்படுவது இல்லை.
விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். ஓவியங்கள் எனக்கு பிடிக்கும்.
வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மனஅமைதியை கொடுக்கிறது. நிறைய
புத்தகங்களும் படிக்கிறேன். என் உலகத்தில் நான் இருக்கிறேன். இவ்வாறு அவர்
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக