ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அதிமுக கவுன்சிலர் உண்ணாவிரதம்! வைகோ, திருமா உதயகுமாரை தாக்கி பேச்சு!


மணிகண்டன் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரரை எதிர்த்து சேலத்தில் அ.தி.மு.க ஊராட்சி உறுப்பினர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கிருத்துவர்கள். வெளிநாட்டுல பணம் வாங்கிட்டு மக்கள் போராடுறாங்க. வை.கோவும் அப்படியே. கையை தூக்கிட்டு போராளி மாதிரி (சீமான்) பேசுறாரே அவரும் ஒரு கிருஷ்துவரே!
சேலம் அ.தி.மு.க வை சேர்ந்தவர் வக்கீல் மணிகண்டன். இவர் தேசிய மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் தன் சகாக்களுடன் உண்ணாவிரதம் செய்தார்.
உண்ணாவிரதத்தில் அவர் பேசியதாவது,
'எங்கு எங்கெல்லாம் அயோக்கியத்தனம் நடக்கிறதோ அங்கெல்லாம் இந்த கடவுள் மறுப்பாளர்கள் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனையை வருகிறது என்றால் நாம் என்ன செய்வோம், போலீசிடம் மனு கொடுப்போம் அல்லது ஊர் முக்கியஸ்த்தர்கள் வைத்து பேசி தீர்ப்போம்.
ஆனால், இந்த உதயகுமார் என்ன செய்கிறார்? அமெரிக்காவிடம் பணம் வாங்கிகொண்டு மக்களை தூண்டி விடுகிறார். நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்பட்டு அணுவுலைக்கு தடையாக இருக்கிறார். ராக்கட் லான்சர் வைத்து தாக்கினாலும் அணுவுலைக்கு பாதிப்பு வராது என மானிட்டர் கமிட்டி சொன்னபோதும் எதையும் கருத்தில் கொள்ளாமல் மக்களை தூண்டிவிடுகிறார். ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்க திட்டமிட்டு நடக்கிறார். இந்த உதயகுமார் அப்துல் கலாமை விட பெரிய ஆளா?
அவரே அணுவுளையால் பாதிப்பில்லை என சொல்லிவிட்டார் இவரென்ன?!
கூடங்குளத்து அணுவுலையை எதிர்க்கும் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கிருத்துவர்கள். வெளிநாட்டுல பணம் வாங்கிட்டு மக்கள் போராடுறாங்க. திருமாவளவன் அமெரிக்காவிடம் பணம் வாங்கிட்டு எதிர்க்கிறார். வை.கோவும் அப்படியே. கையை தூக்கிட்டு போராளி மாதிரி (சீமான்) பேசுறாரே அவரும் ஒரு கிருஷ்துவரே! அணுவுலையை எதிர்க்கிறது தமிழ் அமைப்புகளே. தமிழ் அமைப்புகள் தான் கூடங்குளம் அனுவுலையை எதிர்கிறது. இந்த தேசத்ரோகிகளை கைது செய்ய வேண்டும்... அணுவுலையை இயங்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உண்ணாவிரதம்' என்றார்.

வக்கீல் மணிகண்டன் பேசும்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள உதயகுமார் உள்ளிட்டவர்களை ஒருமையில் பேசினார். ஏன் அவர் இவ்வாறு பேசினார் என்று உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வருத்தம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: