வியாழன், 20 செப்டம்பர், 2012

அடுத்த பிரதமர் யார்? ஜெயலலிதா தீர்மானிப்பார்?

அ.தி.மு.க. அமைச்சர்கள் ராகுலுக்கும், நரேந்திர மோடிக்கும் வீசிய வெடிகுண்டு!

1) தொப்பை வலிக்காமல் பட்டென்று விழுதல்.
2) நாடாளுமன்ற போட்டிக்கோ ரேஸில் ஜெயித்து முகத்தை காட்டுதல்
3) குனிந்து வாயைப் பொத்தியபடி பதில் பகிரல், அப்படியே பாலன்ஸ் பண்ணி, பின்னோக்கி செல்லல்.
Viruvirupu

ஏற்கனவே திகிலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட டில்லி அரசியல்வாதிகள், திடுக்கிடும்படி வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளது, யார் தெரியுமா?
அ.தி.மு.க. அமைச்சர்கள்!
“அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்” என்று அவர்கள் கூறியிருப்பது, டில்லி அரசியல்வாதிகளை, முக்கியமாக பிரதமர் நாற்காலியில் கண் வைத்திருப்பவர்களை கிடுகிடுக்க வைத்திருக்கும்!
பிரதமர் நாற்காலியில் கண் வைத்திருப்பவர்கள் ஏன் கிடுகிடுக்க வேண்டும்?
அவர்கள் டில்லியில் என்னதான் விட்டுக்கொடுத்து அரசியல் செய்தாலும், பப்ளிக்காக அம்மா காலில் விழுவதற்கு எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்?
நம்ம அ.தி.மு.க. அமைச்சர்கள், கூச்சமில்லாமல் காலில் விழுவதற்கென்றே பிஸ்கெட் போட்டு வளர்க்கப்பட்டவர்கள். டில்லிக்காரர்களுக்கு இனி பயிற்சி கொடுப்பது, அதுவும் இந்த வயதில் மிகச் சிரமம்.
தவிர நம்ம அமைச்சர்கள் அளவுக்கு கீழே இறங்க, அவர்கள் தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே.
அ.தி.மு.க. அமைச்சர்கள் இந்த பேரிடியை தூக்கிப் போட்டிருப்பது, மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டத்தில்! அங்கு நேற்று (புதன்கிழமை) மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தேசியக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் முடிவு எடுக்க முடியாதவர்களாக இருக்கும் சூழலில், தனது தீர்க்கமான, தைரியமான நடவடிக்கைகளால் அகில இந்திய அளவில் சிறந்த தலைவராக ஜெயலலிதா விளங்குகிறார். பிரதமராகக் கூடிய தகுதி மிகுந்த தலைவராக இருப்பவர் ஜெயலலிதாதான்” என்றார்.
இந்த ஆளுக்கு எப்போதும், அம்மாவை டில்லிக்கு பேக் பண்ணி அனுப்பிவிட்டு, தமிழகத்தில் தாம் முதல்வராக வேண்டும் என்ற ஆசை!
அதைப் புரிந்துகொண்டோ, என்னவோ, ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்று மிரட்டாமல், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதில் கிங் மேக்கராக இருப்பார் என்று சொன்னார் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்.
“தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். இதன் காரணமாக மக்களின் ஆதரவு அவருக்கு அதிகரித்து வருகிறது. ஆகவே, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி. அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கக் கூடியவராக முதல்வர் ஜெயலலிதா இருக்கப் போகிறார்” என்றார் வைத்திலிங்கம்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, “1967-ல் அரசியல் மாற்றத்தை அண்ணா ஏற்படுத்தினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைத்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல, அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா மத்தியில் அரசியல் மாற்றத்துக்கான அச்சாணியாக இருக்கப் போகிறார். ஏனெனில், தேசிய அளவில் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே.
நம்ம அமைச்சர்கள் இந்தக் கூற்றுக்களையெல்லாம், சும்மா தமாஷாக சொன்னார்களா என்பது எமக்கு தெரியாது. ஒருவேளை சீரியசாக சொல்லியிருந்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் குழு ஒன்று, கீழ்க்காணும் பயிற்சிகள் கொடுப்பதற்காக டில்லி செல்ல வேண்டியிருக்கும்.
1) தொப்பை வலிக்காமல் பட்டென்று விழுதல்.
2) நாடாளுமன்ற போட்டிக்கோ ரேஸில் ஜெயித்து முகத்தை காட்டுதல்
3) குனிந்து வாயைப் பொத்தியபடி பதில் பகிரல், அப்படியே பாலன்ஸ் பண்ணி, பின்னோக்கி செல்லல்.

கருத்துகள் இல்லை: