சனி, 22 செப்டம்பர், 2012

சீரியஸ் படம் வேண்டாம் உதவி இயக்குனருக்கு வெங்கட் பிரபு அட்வைஸ்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
 ஜாலியான படம் இயக்கும்படி உதவி இயக்குனருக்கு வெங்கட்பிரபு அட்வைஸ் செய்தார். ‘சரோஜா, ‘கோவா, ‘மங்காத்தா போன்ற படங்களில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கடேசன்.ஆர். இவர் ‘நளனும் நந்தினியும் என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி வெங்கடேசன் கூறியதாவது: வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது படம் இயக்கும் நுணுக்கங்களை கற்றேன். அவர் படங்களில் காதல், நகைச்சுவையுடன் கமர்ஷியல் அம்சமும் சமமாக கலந்திருக்கும். ‘நளனும் நந்தினியும் படத்தை இயக்குவதாக அவரிடம் கூறியபோது, ‘ரொம்ப சீரியசாக இல்லாமல் ஜாலியான படமாக எடு என்றார். அவரது அட்வைஸ்படியே இக்கதையும் அமைந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க காதல் படம்.
இரண்டு கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். மைக்கேல் ஹீரோ. ‘அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதா ஹீரோயின். ஜெயப்பிரகாஷ், ரேணுகா, பானுசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நிஷார் ஒளிப்பதிவு. அஷ்வத் இசை. இப்படத்தை தயாரிக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.டி ஆலோசகராக பணியாற்றுகிறார். சினிமாவை நேசிப்பவர். இதனால் பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் மதுரை, சென்னை, ஈரோடு போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடந்து முடிகிறது.

கருத்துகள் இல்லை: