வெள்ளி, 21 செப்டம்பர், 2012

BJP-நடிகை ரம்யா இடையே கடும் வாக்குவாதம்

முழு அடைப்பின்போது படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரம்யாவுடன் பா.ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைசூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.<நடிகர் திகந்த், நடிகை ரம்யா ஜோடியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மைசூர் லலிதா மகால் பேலஸ் மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பு குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கான பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்யா காலை 9.30 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்து இறங்கினார்.அப்போது அங்கு வந்த பா.ஜனதா தொண்டர்கள், நடிகை ரம்யாவிடம், ``இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. சினிமா தியேட்டர்கள் கூட மூடப்பட்டு இருக்கின்றன. எனவே, படப்பிடிப்பை ரத்து செய்து விடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.இதற்கு ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ``நாங்கள் ஏன் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். இங்கு சுமார் 150 பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்தால் அவர்களுக்கு யார் கூலி கொடுப்பது, நீங்கள் கொடுக்கிறீர்களா?.
ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் ரோட்டுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள். இங்கு வேண்டாம்'' என்று ரம்யா கூறினார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரம்யா அங்கிருந்து சென்று காரில் ஏறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து அவர் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

``பொதுமக் களுக்கு இப்படி தொந்தரவு கொடுப்பதை சகித்துக் கொள்ள முடியாது'' என்று அவர் ஆத்திரத்துடன் கேட்டார்.இதையொட்டி படப்பிடிப்பு குழுவினருக்கும், பா.ஜனதா வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பா.ஜனதாவினர், ``நீங்கள் காங்கிரஸ் ஏஜெண்டு போல நடந்து கொள்கிறீர்கள். முழு அடைப்புக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என்று கூறினார்கள்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தேவராஜா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆர்ப்பாட்டக் காரர்களை சமாதானம் செய்த போலீசார், பலத்த பாதுகாப்புடன் ரம்யாவை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.>இந்த சம்பவத்தால் சுமார் 45 நிமிடங்கள் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பா.ஜனதா கட்சியினர் கூறுகையில், ``பொதுமக்கள் பிரச்சினைக்காக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் ரம்யா, அந்த கட்சியின் ஏஜெண்டு போல நடந்து கொண்டார். இது கண்டிக்கத்தக்கது'' என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: