சனி, 22 செப்டம்பர், 2012

தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா பரபரப்பு புகார்

சென்னை: தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார்.
'கேடி' படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த "அயன்" படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது.
2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் நாயகியாகத் திகழ்ந்தார்.
கார்த்தியுடன் பையா. சிறுத்தை என இரு படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதே நின்றுபோனது.
தெலுங்கில் மட்டும் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் தமன்னா, இப்போதும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ஹிம்மத் வாலா படத்தில் நடிக்கிறார்.

தமன்னாவுக்கு இந்தியில் மேலும் இரு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. அதில் ஒன்று விஜயகாந்த் நடித்து தமிழில் ஹிட்டான ரமணாவின் ரீமேக்.
ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாக தமன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்பவே ஆசையாக உள்ளது. ஆனால் இது நிறைவேறுமா என்று தெரியவில்லை. எனக்கெதிராக அந்த அளவுக்கு சதி நடக்கிறது," என்றார்.

கருத்துகள் இல்லை: