செவ்வாய், 18 செப்டம்பர், 2012

சமூக நீதிக்காக இன்னும் போராடி வரும் இயக்கம் தி.க

ஈரோடு: சமூக நீதிக்காக இன்னும் போராடி வரும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
சுயமரியாதை திருமணங்களை சட்ட உரிமையாக்கியவர் அண்ணா. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் யாரும் நீதிபதி ஆக முடியவில்லை என்பது குறித்து பெரியார் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, டெல்லிக்கு தனது அமைச்சரை அனுப்பி நடவடிக்கை எடுத்தார். கடந்த 1971ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பெரியார் வகுத்த கொள்கைகளின் மூலம் வெற்றிகள் கிடைத்து கொண்டே இருக்கிறது. ஆனால் நமது இலக்கு இன்னும் ஓயவில்லை. ரூ.2,400 கோடி செலவழித்த பிறகும் முடங்கி கிடக்கும் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வைக்க வேண்டும். தமிழனின் திட்டமான சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த திராவிடர் கழகம் விரைவில் போராட்டம் நடத்தும்.. பெரியார் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம். சமூக நீதி கிடைக்க போராடுவோம் என்றார்

கருத்துகள் இல்லை: