வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மம்தா: இடதுசாரிகளால் மேற்கு வங்கம் சிதைந்துவிட்டது

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்-அமைச்சர்  மம்தா பானர்ஜி பேசியதாவது:-
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை ஒருநாளும் ஏற்க மாட்டோம். இந்த பிரச்சினையை முன்வைத்து மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைந்துவிட்டது. இந்த போராட்டம் மக்கள் விரோத நடவடிக்கை. இடதுசாரிகளின் போராட்டங்களால் மேற்கு வங்கம் சிதைந்துவிட்டது. பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படும். அன்னிய முதலீடு பற்றி முடிவெடுத்த மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது. இதற்காக நான் டெல்லி சென்று போராடுவேன்.

மத்திய அமைச்சரவையில் இருந்து எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் , நாளை ராஜினாமா செய்ய உள்ளனர். இதற்காக குடியரசுத்தலைவரை  சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: