ஞாயிறு, 11 ஜூலை, 2010

தர்சிகாவின் அகால மரணம் எல்லோரையும் கவலைகுள்ளக்கும் சம்பவம்

வேலணை மத்திய மருத்தகத்தில் கடமையாற்றிவந்த இந்த இளம் பெண் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை நடத்திய சட்டவைத்தியஅதிகாரி இரத்தினசிங்கம் இம்மரணம் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மரணவிசாரணைகளை நடத்திய வேலணை மாவட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி;வைத்ததுடன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதேவேளை  சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வைத்தியர் பிரியந்த செனிவரத்னா தற்போது சங்கானை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் வேலணைப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
வேலைணையில் குடும்ப நல உத்தியோகத்தராக பணியாற்றி வந்த செல்வி தர்சிகாவின் அகால மரணம் எல்லோரையும் கவலைகுள்ளக்கும் சம்பவம்.இதில் ஒரு சிங்கள வைத்திய அதிகாரி சம்பத்தப்பட்ட உடனேயே இது தமிழ் சிங்கள இன யுத்தமாக வர்ணிக்க எத்தனிக்கும் புலம்பெயர் புலிப்பினாமி உடகங்களுக்கு எப்பொழுதுதான் பொழுது விடியுமோ? போதுமட சாமி.
குட்ட்ரவாழிகள் யாராக இருந்தாலும் சட்டம் நிச்சயம் தன் கடமையை செய்யும். 
செல்வி தர்சிகாவின் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துகொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: