ஞாயிறு, 18 மே, 2025

ஜெயந்தி ராஜன் இந்திய - முஸ்லிம் லீக் துணைச் செயலாளராக தேர்வு! கேரளாவை சேர்ந்தவர்!


jaffnamuslim.com  : முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினராக இணைந்து பல ஆண்டு காலம் மகளிர் அணி மாநில மற்றும் தேசிய பொருப்புகளை வகித்து சிறப்பான பணியாற்றியவர்  ஜெயந்தி ராஜன்.
 கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜெயந்தி ராஜன் அவர்கள்  இன்று (17) சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் சகோதரி ஜெயந்தி ராஜன் அவர்கள் தேசிய துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.  


தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய நிர்வாகத்தில் இடம் பெறும் முதல் பெண் முஸ்லிம் அல்லாத சகோதரி ஜெயந்தி ராஜன் ஆவார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனி குமார் சின்ஹாவும் தேசிய துணைச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்

கருத்துகள் இல்லை: