nakkeeran: மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற போது உயிரிழந்த வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து இருவரின் உடல்களுக்கும் தீயணைப்புத்துறை டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு இருவரது உடலும் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் அவரது குடும்ப வழக்கம் முறைப்படி இறுதி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. தீபாவளி நாளில் தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக