வியாழன், 12 நவம்பர், 2020

பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி தேஜஸ்வி முதல்வராக ஆதரவு தர வேண்டும்’’- திக் விஜய் சிங் திடீர் அழைப்பு

.hindutamil.in :  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி பிஹார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.   பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.

இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியது.

பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறயதாவது:

‘‘பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சோசலிச கொள்கையை பின்பற்றுபவர். அவர் பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவு தரக்கூடாது. மிகப்பெரிய தலைவரான அவர் இனிமேல் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி பிஹார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க ஆதரவு அளிக்க வேண்டும்.’’ எனக் கூறினார்

1 கருத்து:

Ashraf ali சொன்னது…

அருமையான கருத்து நானும் இதைத்தான் நினைத்தேன்.