புதன், 11 நவம்பர், 2020

அர்னாப் "கோஸ்வாமி" க்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதி மன்றம் மறுப்பு... |  Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews -  Tamilnadu, India & World - politics, cinema ...
tamil.indianexpress.com :  தற்கொலை செய்யத் தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் போக்கை கண்டித்த உச்ச நீதிமன்றம், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் விஷயங்களில் உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள்  போதுமானதாக இல்லை என்றும் கருத்து தெரிவித்தது.   “இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட உயர்நீதிமன்றங்கள், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் விஷயங்களில் போதுமான அளவு செயல்படவில்லை. இது, எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. …”என்று நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.

“நாங்கள் இன்று தலையிடாவிட்டால்,  மக்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை … மாநில அரசுகள் நடந்து கொள்ளும் முறை இதுதானா? ….. பிடிக்காத தொலைக்காட்சி  சேனலை நீங்கள் தவிர்த்து விட வேண்டும் …. நான் அந்த இடத்தில் இருந்தால், கட்டாயம் பார்த்திருக்க மாட்டேன்…  தனிநபர்கள் இவ்வாறு குறிவைக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் கட்டாயம் தலையிடும்,”என்று அவர் மேலும் கூறினார்.

மும்பை உயர்நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து கோஸ்வாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை  நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய  அமர்வு விசாரித்தது.

கடந்த மே 2018 அன்று, மகாராஷ்டிராவில் அலிபாகில் உள்ள பங்களாவில் உள் அலங்கார வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரின் தாயார் இருவரும் இறந்து கிடந்தனர்.
இறப்பதற்கு முன்பாக, அன்வே நாயக் எழுதிய தற்கொலைக் குறிப்பில், ” ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஐகாஸ்ட்எக்ஸ் / ஸ்கிமீடியா நிறுவனத்தின் பெரோஷ் ஷேக் , ஸ்மார்ட்வொர் நிறுவனத்தைச் சேர்ந்த நிதீஷ் சர்தா ஆகிய மூன்று நிறுவனங்கள் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தால், இந்த மோசமான முடிவை நான் எடுக்கிறேன்” என்று குறிபிட்டார்.

 

மகாராஷ்டிரா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். ஒருகட்டத்தில் நீதிபதி சந்திரசூட்  கபில் சிபலிடம், “தற்கொலைக்குத் தூண்டும் வகையில் ஏதேனும் தீவிர உள்நோக்கம் இந்த வழக்கில் உள்ளதா?” என்று கேட்டார்.  “இல்லையெனில் கடுமையான விளைவுகளை சிந்தித்து பாருங்கள். நாம், தனிப்பட்ட  மனிதர்களுக்கு தொடர்புடைய  சுதந்திரத்தை கையாள்கிறோம், ”என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

இந்தியா ஜனநாயகம் அசாதாரணமானது, மகாராஷ்டிரா அரசாங்கம் இதையெல்லாம்  புறக்கணிக்க (அர்னாபின் தொலைக்காட்சியில் அவதூறு) வேண்டும் என்றும் அவர் கூறினார்

கோஸ்வாமி தரப்பில் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜாரானார். கோஸ்வாமிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மகாராஷ்டிரா காவல்துறை முயற்சித்து வருகின்றனர் என்று கூறினார்.

ஐபிசி பிரிவு 306 ன் கீழ், தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றத்தை நிறுவ போதிய அடிப்படை ஆதாயங்கள் இல்லை. “குற்றத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்தால் தான் தற்கொலைக்கு தூண்டினார் என பொருள் கொள்ளப்படும். மகாராஷ்டிராவில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு அரசாங்கத்தை குற்றம் சாட்டினால், முதல்வர் கைது செய்யப்படுவாரா?,” என்றும் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, நவம்பர் 9 ம் தேதி, நீதிபதிகள் எஸ். எஸ் ஷிண்டே மற்றும் எம் எஸ் கார்னிக் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் தர மறுத்தது.

சிஆர்பிசி பிரிவு 439 ன் கீழ், அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், ஜாமீன் மனு தாக்கல் செய்தால், அதை நான்கு நாட்களில் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே , உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) தலைவர் துஷ்யந்த் டேவ், “அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு மட்டும் ஏன் உச்ச நீதிமன்றத்தில் விரைந்து விசாரிக்கப்படுகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: