வியாழன், 12 நவம்பர், 2020

துரோகத்திலேயே வளர்ந்த நிதிஷ் திரும்பவும் பாஜகவிற்கு டாட்டா காட்டலாம்?

Narain Rajagopalan : · சிராக் பாஸ்வானின் ஒரே நோக்கம் நிதிஷ் முதல்வராவதை தடுப்பது. ஆகவே எல்.ஜே.பியின் 1 சீட். ஒவாசி என்ன தான் பி டீமாக இருந்தாலும் நேரடியாக பாஜகவை ஆதரிக்க முடியாது. AIMIMன் 5 சீட். ஒரே ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. அவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு தான் தாவுவார்கள். அதனால் அது எந்த பக்கம் வேண்டுமென்றாலும் போகலாம். நீலசங்கி கோஷ்டியான பி.எஸ்.பிக்கும், காங்கிரசுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் அவர்களின் ஒரு சீட் வராது. இப்போது செய்ய வேண்டிய ஒரே வேலை லாலுவோ, சிராக் பாஸ்வானோ ஜித்தன் ராம் மஞ்சிக்கு ஒரு போன் அடிப்பது, பேசுவது. ஜித்தன் ராம் மஞ்சியின் கட்சியும் (4), விகாஷீல் இன்சான் கட்சியும் (4) தான் தே.ஜ.கூவினை 122-னினை தாண்ட வைத்திருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றினை உருவினால் கூட போதும். இதில் விகாஷீல் வராது, மோடி தொண்டரடிப் பொடி கும்பல்.
ஜித்தன் ராம் மஞ்சி இதற்கு முன்பு முதல்வராக இருந்தவர். துணை முதல்வரோ, அதற்கு இணையான பதவியோ தருகிறோம் என்றால் கூட்டணி மாற வாய்ப்பிருக்கிறது. நிதிஷின் கட்சியையே உடைக்கலாம். எல்லோரும் சோர்ந்து போய் தான் இருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் மகாராஷ்ட்ரா மாடல் உருவாகும் சாத்தியங்கள் தெரிகிறது.
அதை விட முக்கியமாய் ஒன்று நடந்தால் சிறப்பு. இது நடக்கும் சாத்தியமிருந்தால் சிராகோ, ஒவாசியோ, மஞ்சியோ தேவையில்லை. ஒட்டு மொத்தமாக திரும்பவும் பாஜகவிற்கு டாட்டா காட்டலாம். வாழ்நாள் முழுக்க துரோகத்தினாலேயே வளர்ந்தவர் தான் நிதிஷ், ஆனால் ஷார்ப்பான அரசியல்வாதி. ஒரு துரோகத்தை அரசியல் வாழ்வின் முடிவில் செய்வதில் தப்பில்லை.
நிதிஷ் போன முறை MGBயில் வென்று, பின்னாளில் பாஜக பக்கம் போய் துரோகம் செய்தவர். இந்த முறை அதே துரோகத்தை பாஜகவிற்கு செய்ய தயாராகி விட்டால் (துரோகம் செய்வது புதியதா என்ன) பீகாரில் ஆட்சியில் பங்கு பெற்று அரசியல் வாழ்க்கையிலிருந்து ரிட்டையர் ஆகி விடலாம்.
எப்படியும் முதல்வரானாலும் பாஜக அவரை வாழ விட போவதில்லை. அதற்கு கவுரவமாக தேஜஸ்வினியின் “பெரியப்பா” அந்தஸ்த்தினை பெற்று, லாலு என்னுடைய உடன்பிறவா அண்ணன்/ தம்பி என்று சொல்லி விட்டு, 5 வருடங்கள் தெளிவாய் பீகார் அரசியலில் இருந்து விட்டு விடைபெறலாம்.
Politics is all about possibilities. Let's see what's in store at Patna.
.  

கருத்துகள் இல்லை: