திருவிழா போல் மகிழ்ச்சி
பாகிஸ்தானின் நெருங்கிய நண்பர் என்று ஜோ பிடனை அந்நாட்டு அரசியல் தலைவர்கள்
ஆரம்பம் முதலே பாராட்டி வந்துள்ளனர். கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை
சேர்ந்தவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்
என்பதாகவே அவரது கடந்த கால செயல்பாடுகள் இருந்தன. எனவே இவர்கள் இருவரும்
அமெரிக்காவின் அதிபர், துணை அதிபராக பதவியேற்றால், பாகிஸ்தானின் கை ஓங்கும்
என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல் டிரம்ப் வெளியேற
இருப்பதை, பாகிஸ்தான் அரசும், மக்களும் அங்கு திருவிழா போல் கொண்டாடி
மகிழ்கிறார்கள்..
குரல் கொடுத்த பிடன் பிடன் அதிபரான பின்னர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியற்றுக்கு எதிராக மூக்கை நுழைப்பாரா என்ற அச்சம் உள்ளது. ஏனெனில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை ஏற்க மறுத்துவிட்டார். காஷ்மீரிகள் உலகில் தனியாக இல்லை என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். கோரிக்கை வைத்தால் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்
ஹிலால்-இ-பாகிஸ்தான் இதேபோல் 2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கவுரவ 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' விருது வழங்கியது. ஜோ பிடன் மற்றும் செனட்டர் ரிச்சர்ட் லுகர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு 1.5 பில்லியன் டாலர் இராணுவமற்ற உதவிகளைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை முன்வைத்தார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்
ஒசாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் உலகின் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் கொன்றபோது, பிடன் பாகிஸ்தான் பிரதேசத்தில் அமெரிக்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை அதிபராகும் பிடன், துணை அதிபராக இருந்தபோது விமர்சித்தார் என்பைதயும் நினைவில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், ‘டிரம்ப்பால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தியாவுடனான
நெருங்கிய நட்பை மற்றம் இருதரப்பு ஒப்பந்தங்களை பிடன் மாற்றுவதற்கு
வாய்ப்புகள் குறைவு. இது தொடர்பாக அரசியல் நிபுணர்கள் கூறுகையில், அமெரிக்க
அதிபர் தேர்தலில் பிடனின் வெற்றி இந்தியா - அமெரிக்கா உறவை எந்த வகையிலும்
பாதிக்காது. ஏனெனில் அண்மைக் காலமாக பெரிய அச்சுறுத்தலாக சீனா உருவாகி
இருப்பதால், அதை ஒடுக்குவதற்காக இந்தியாவுடன் நட்பு பாராட்ட வேண்டிய
கட்டாயத்தில் பிடன் உள்ளார். சீனாவுடன் வர்த்தக போர் நடந்து வருவதால்,
இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் வெள்ளை மாளிகை மென்மையை
கடைபிடிக்கவே வாய்ப்பு உள்ளது. பிடன், குடியேற்றம் மற்றும் எச்1பி
விசாக்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க போகிறார். இதன் மூலம்,
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நல்ல பலன்
கிடைக்கும் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக