வியாழன், 12 நவம்பர், 2020
50 பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு.. தலையை துண்டித்து.. ஐ.எஸ் தீவிரவாதிகள்..
Hemavandhana- tamil.oneindia.com :
மாபுடோ, (ஆப்பிரிக்கா): கால்பந்து மைதானத்தில், 50-க்கும் மேற்பட்டோரை
இழுத்துவந்து அவர்களின் தலையை அசால்ட்டாக துண்டித்து வீசி விட்டு
போயுள்ளனர் ஐஎஸ் பயங்கரவாதிகள்..
இப்படி ஒரு வெறிச்செயல் ஆப்பிரிக்க
நாட்டில் நடந்துள்ளது!
தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக்... இந்த நாட்டின் வடக்கு
பகுதியில் உள்ள கபோ டெல்போ மாகாணத்தில் கடந்த 2017-ல் இருந்து ஐஎஸ்
பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐஸ். பயங்கர அமைப்பு, அதன் ஆதரவு
பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத
குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்போதிருந்தே இங்கு காலூன்ற
பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு மத அடிப்படையிலான அரசை நிறுவ வேண்டும் என்பதுதான் நோக்கம்..
அதற்காக அங்குள்ள அரசு படைகளுடன் நேரடியாக சண்டையிட்டு வருகின்றனர்... இந்த
சமயத்தில் அப்பாவி பொதுமக்கள் என்றெல்லாம் யாரையுமே பார்ப்பதில்லை.
சரமாரியாக கொன்று குவித்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்..
குறிப்பாக கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை குறிவைத்தே இந்த
கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மறுபடியும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.. கபோ டெல்போ
மாகாணத்தில் நஞ்சாக என்ற கிராமம் உள்ளது.. இங்கு திடீரென கிட்டத்தட்ட 100
பயங்கரவாதிகள் திபுதிபுவென உள்ளே நுந்துவிட்டனர். அவர்கள் எல்லார் கையிலும்
பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன.. அங்கிருந்த வீடுகளுக்கு மளமளவென தீ
வைத்தனர்.. பிறகு கிராம மக்கள் பலரை துப்பாக்கி முனையில் கடத்தியும்
சென்றனர்.
50-க்கும் மேற்பட்டோரை தரதரவென ஒரு மைதானத்துக்கு இழுத்து போனார்கள்.. அந்த
மைதானம் கால் பந்து விளையாடுவதற்காக கிராம மக்களே உருவாக்கியது.. அந்த
மைதானத்துக்குள் இழுத்து சென்ற பயங்கரவாதிகள், எல்லாரையுமே தலைகீழாக
தொங்கவிட்டு, ஒவ்வொருவரின் தலையையும் துண்டித்து மிக கொடூரமாக கொலை
செய்தனர்...
இப்படியே 50 தலைகள் தலையில் ரத்தம் தெறிக்க விழுந்தன.
இந்த கொடுஞ்செயலை கண்டு கிராம மக்களை அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..
கொல்லப்பட்டவர்களின் உடல்களை, பயங்கரவாதிகள் அங்கும் இங்கும் வீசிவிட்டு
தப்பினர்.. இதைதவிர, மேலும் சில பெண்களையும், குழந்தைகளையும் அவர்கள்
கடத்தி கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று
வருவதாக மொசாம்பிக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக