திங்கள், 9 நவம்பர், 2020

ஃபாஸ்டேக் கட்டாயம்! கார் வைத்திருக்கிறீர்களா?

கார் வைத்திருக்கிறீர்களா?  இனி ஃபாஸ்டேக் கட்டாயம்!

minnampalam :டோல்கேட்டுகளில் செல்லும்போது ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி கட்டணம் வாங்கும் முறையை மாற்றி, ஃபாஸ்டாக் முறை2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.   இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட நான்குசக்கர வாகனங்கள், எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு 2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்படுகிறது.   மத்திய மோட்டார் வாகன விதிகளில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் 2020 நவம்பர் 6-ம் தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 690 (இ) என்ற ஆணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன் படி2017-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது முகவர்களால் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்.

மேலும், போக்குவரத்து வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே பிட்னஸ் சான்றிதழை (எ ஃப்.சி.) புதுப்பிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாகன உரிமையாளரும் ஃபாஸ்ட் டேக் கை தங்கள் வங்கிக் கணக்கோடு இணைத்துவிட வேண்டும். இதனால் டோல்கேட்டில் பணம் செலுத்துவதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில் நுட்பத்தின் மூலம், டோல்கேட் கட்டணம் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பரிமாற்றம் செய்யப்படும்.

-வேந்தன்

 

கருத்துகள் இல்லை: