வெள்ளி, 15 மே, 2020

இந்தியாவில் 23 கோடி ரேசன் கார்டுகள்தான் உள்ளது .. ஆனால் 69 கோடி ரேசன் கார்டுகள் உள்ளதாக நிர்மலா சீதாராமன்

ஆலஞ்சியார் : இந்தியா கண்ட நிதியமைச்சர்களில் மிக மோசமான ிவழங்கியதென்ற பெயர் விடுதலை இந்தியாவின் முதல் நிதியமைச்சர் கூட சண்முகம் செட்டியார் தமிழகம் தான் .. தொடர்ந்து சி.எஸ்.வெங்கட்ராமன் ப.சிதம்பரம் என அறிவார்ந்தவர்களை தந்ததிருக்கிறது .. நாட்டின் பல நிதியமைச்சர்கள் நிதியமைச்சகத்தை மிக சாதூர்யமாக கைகாரியம் செய்தார்கள் பிரணாப், பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங்
என சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.. ஆனால் அரைகுறை தெளிவோடு ஒரு நிதியமைச்சர் இப்போதுதான் இந்தியா காண்கிறது . 69 கோடி ரேசன் கார்டு என்கிறார் .. 2019 பதிவின் படி 23 கோடி தான் என்ற அறிவு கூட அவரிடம் இல்லை கடந்த இரண்டுமாதங்களாக
ஊடரங்கு அறிவிக்கபட்ட நிலையில் சிறு தொழிலுக்கு கடன் வழங்கபட்டதாக சொல்கிறார் .. பொய்யை கூட மிக இலகுவாக கொஞ்சமும் கூச்சமின்றி சொல்ல அவர்களுக்கு மட்டும் தான் வரும் .. வராகடன் தொழிலதிபர்களுக்கு மீண்டும் ₹50,000 கோடி கடன் .. வீட்டுகடன் வாங்கியவன் திருப்பி செலுத்தும் போது செலுத்தாத தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும் ..ஏற்கனவே ₹68,000 கோடி வராகடனை எழுதி தள்ளியாகிவிட்டது


இந்த நாட்டை தனியார்மயமாக்க தொடர்ந்து அவசர அக்கறை காட்டும் பாஜக அரசு .. தொலை தொடர்புத்துறையில் கோலோச்சிய bsnl இழுத்து மூட தயாராகிவிட்டது .. தனிநபருக்காக பொதுத்துறை நிறுவனங்களை காவு கொடுக்கும் கேடுகெட்ட அரசு ..
31.3.20 அன்று உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் 4.1 கோடிபேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று உள்துறை செயலாளர் சொல்கிறார் ..ஆனால் நிதியமைச்சர் ரேசன் வழங்குவதால்
8கோடி பேர் பலனடைவார்கள் என்கிறார் வாயை திறந்தாலே பொய் தான் .. பொய்யை மூலதனமாக கொண்டவர்களிடம் நேர்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது .. நடைபாதை வியாபாரிகளுக்கு ₹10,000 வழங்கபடும் அது அடுத்தமாதம் தான் செயல்திட்டம் வகுக்கபடும் ..
..
ப.சிதம்பரம் ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும்,₹5,000 வழங்குங்கள் என்றார் இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் முதல் ஊரடங்கின் போதே வழங்கியிருப்போம் என்கிறார் .. எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் இந்த பாஜகவினருக்கு இல்லை.. புலம்பெயர் தொழிலாளிகளை நெடும்பயணம் நடக்கவிட்டதை தவிர வேறெதாவது ஆக்கபூர்வமான செயல்கள் இல்லை அவர்களிடத்தில் கூட வண்டிக்கூலி கேட்ட அயோக்கியத்தனம் உலகின் எந்த ஆட்சியாளருக்கும் வந்ததில்லை நக்கள் படும் துயரை கண்டு நீலிக்கண்ணீர் வடிப்பதில் கெட்டிக்கார பிரதமர் ..
..
இவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என செயல்படுபவர்கள் .. பணமதிப்பிழபிபின் போதே அமிர்ஷா வங்கியில் #745 கோடி மாற்றியது உண்மை என தகவல் அறியும் உரிமை மூலம் மோடி அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது ..இவர்கள் ஊழலுக்கு எதிரானவர்களென இன்னமும் சில நடுநிலைகள் உரக்க கூவிக்கொண்டுதான் இருப்பார்கள் ..அடுக்கடுக்காய் அடுத்தடுத்து பொய்களை சொன்னாலும் ஊடகங்களும்
சில தேசபக்தர்களும் விடாமல் தாங்கிக்கொண்டே இருப்பார்கள் .. நல்ல நிர்வாகத்தை தரும் திறமையோ அல்லது திறமையான துறைசார்ந்தவர்களின் அறிவுரைகளையோ காதுகொடுப்பதில்லை .. அதெப்படி வரலாறு படித்துவிட்டு ரிசர்வ் வங்கி கவர்னராக வரலாம் என்பதெல்லாம் பாசிச ஆட்சியில் தான் நடக்கும்..
..
முட்டாள்கள் கையில் நாடும் நாட்டுமக்களும்
..
ஆலஞ்சியார்

தற்குறியாக நிர்மலா சீதாராமன் தெரிகிறார் .. தமிழகத்திற்கென்று ஒரு சிறப்புண்டு இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சர்களை வார

கருத்துகள் இல்லை: