புதன், 13 மே, 2020

விழுப்புரம் சிறுமி கொலை... யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது அரசு?

samayam tamiltamil.samayam.com : விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயின் கொலையை சாதாரண தீ விபத்துச் சம்பவம் போல குறிப்பிட்டுள்ளது அரசு செய்தி.
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்ப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவடையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், இதனை வெறும் தீ விபத்து என்று அப்திவு செய்துள்ளது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம். பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் ரண வேதனையுடன் இறந்த சம்பவத்தால் நாடு மொத்தமும் கலங்கியது. இந்நிலையில், இதற்குக் காரணமான இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் மறைக்கப் பார்க்கிறதா அரசு என்று கேள்விகள் எழும்பும் விதமாக அரசு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள். இன்னொருவர் முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர்கள் இருவருக்கும் ஜெயபால் என்பவருடன் முன் பகை இருந்துள்ளது. இந்தப்பகையின் காரணமாக ஜெயபாலின் மகளை வலுக்கட்டாயமாகக் கை காலை கட்டிப்போட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்தச் சிறுமி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ''ஜெயஸ்ரீயை'' எரித்துக் கொன்ற அதிமுகவினர் இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கைகள் வெளியிடத் தொடங்கின. இந்நிலையில், கொலை செய்த இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கியும் உத்தரவிட்டது அதிமுக.
குற்றவாளிகளை கட்சியை விட்டு விலக்கி அதிமுக அறிவிப்பு


மேலும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும் ட்விட்டரில் முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் அறிவிக்கப்பட்டபடி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சிறுமியின் தந்தை ஜெயபாலிடம் அளித்தார்.

!

இந்த செய்தி விழுப்புரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (13.05.2020) வெளியானது.

samayam tamil
விழுப்புரம் மாவட்ட அரசு இணையதளம்

அந்தச் செய்தியில், “சிறுமதுரை கிராமத்தில் தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீ” காவல்துறை இருவரைக் கைது செய்துள்ளது. அதிமுக இருவரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளது. மேலும், இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைக்கிறது என முதல்வரே பதிவிட்டுள்ளார்.

samayam tamil
அரசு செய்தியின் படம்

இவ்வளவு நடந்த பிறகும், எப்படி சாதாரணமாக இதனை ஒரு தீ விபத்து என்பதுபோல அரசு பத்திரிகை செய்தி கூறுகிறது. இப்படி ஒரு செய்தி வெளியிடுவதன மூலம் எதை மறைத்து யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறது அரசு என்று கேள்விகள் எழும்பியுள்ளன

கருத்துகள் இல்லை: