வியாழன், 14 மே, 2020

மகராஷ்டிரா மாடு ஒருபக்கம் - மனிதன் ஒருபக்கம் .. மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ..


மாடு  ஒருபக்கம் - மனிதன் ஒருபக்கம் !மின்னம்பலம் :காளைகள் பூட்டும் வண்டியில் ஒருபக்கம் மாடு இருக்க மற்றொரு பக்கம் மனிதன் இழுத்து செல்லும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதி முடங்கி வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ராகுல் என்பவர் காளையுடன் சேர்ந்து வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக
வலைதளங்களில் பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன் பெண்கள் உள்ளிட்ட சிலர் அமர்ந்துள்ளனர். அவர் சோர்வடையும் நேரம், அவரது மைத்துனர் வண்டியை இழுத்துச் செல்கிறார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அருகே பட்டர்முண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் ஊரடங்கால் மோவ் நகரத்திலிருந்து தங்கள் ஊருக்குச் சென்று கொண்டுள்ளதாக வீடியோவில் ராகுல் கூறுகிறார்.

மேலும், ‘ஊரடங்கால் பஸ்கள் ஓடவில்லை. இல்லையெனில் அனைவரும் பஸ்சில் பயணித்திருப்போம். என் தந்தை, சகோதரர், சகோதரிகள், எங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். 15,000 ரூபாய் மதிப்புள்ள மற்றொரு காளையை, குடும்பத்துக்குப் பொருட்கள் வாங்க 5,000 ரூபாய்க்கு விற்றதால், இந்த நிலை ஏற்பட்டது’ எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உதவிகள் வழங்க அதிகாரிகள் ராகுலைத் தேடுகின்றனர்.
-ராஜ்

கருத்துகள் இல்லை: