மின்னம்பலம் : கொரோனாவை எதிர்த்து நாடு மூன்றாவது பொது முடக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், ‘ஊரடங்கு, பொது முடக்கத்தை நீட்டிக்கும், முடிக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கடிதம் எழுதியுள்ளார்.
மே 8ஆம் தேதி பிரதமருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முடிவுகள் எல்லாம் மத்திய அரசாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. சிகப்பு, ஆரஞ்சு, பச்சை எனக் கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுப்பதும், அங்கே எந்தவிதமான பொருளாதார நடவடிக்கைகள் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களில் கொரோனா
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மண்டலங்களை நிர்ணயிப்பதாக மத்திய அரசு அறிவிக்கிறது. கொரோனா தொற்று இல்லாத நிலையில் பசுமை மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இடையில் அங்கே சில தொற்றுகள் கண்டறியப்பட்டால் மத்திய அரசு அதை சிவப்பு மண்டலமாக அறிவிக்கிறது. அங்கு தொடங்கப்பட்ட சிறிய பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் மூடப்பட வேண்டிய சூழல் மாநில அரசுக்கு வருகிறது. இந்த விஷயத்தில் மாநிலங்கள் வரையறை செய்யும் அதிகாரம் இல்லாததால் ஒவ்வொரு மாநிலமும் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கின்றன” என்று கூறியிருக்கும் சத்தீஸ்கர் முதல்வர் மேலும் தன் கடிதத்தில்,
“பொது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி தெளிவான திட்டம் ஏதும் இல்லாத நிலையே இப்போது நிலவுகிறது. இந்த நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொருளாதார நடவடிக்கைகளைச் சூழலுக்கேற்ப இயக்குவதற்கான முழு உரிமைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்” என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில அரசுகள் அன்றாட நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்வது கடினம் என்றும் சத்தீஸ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக