செவ்வாய், 12 மே, 2020

இந்தியா வன்முறை தலைநகரமாக இருப்பதற்கு..

Shalin Maria Lawrence "... தலைக்கு சுர்ருன்னு ஏறிட்ச்சி.. .பொறுக்கமுடியாத
கோவம், வெறி".
இறைவி படத்தின் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு sj சூர்யா இப்படி பேசுவார்.
இந்த படம் வந்த போது என்னை மிகவும் அசைத்து போட்ட வசனம் இது.
"பொறுத்து போக நாம என்ன பொம்பளையா ?! ஆம்பள மாமா!
ஆண் நெடில்!!!!! பெண் குறில்.
எவ்வளவு கேவலமான பிறவிங்க இல்ல நம்ம?!!! "
என்ற வசனம் ஒரு ஆணிடமிருந்து வந்த மிக நேர்மையான சுய விமர்சனம்.
இறைவி படம் எனக்கு முதலில் பெரிதாக படவில்லை .இதில் பெண்ணியம் என்ன இருக்கிறது? இந்த இந்தப்படத்தில் நான்கு ஆண்கள் இருக்கிறார்கள் நான்கு பெண்கள் இருக்கிறார்கள் அந்த ஆண்கள் தங்களுக்கு தானே குடித்துவிட்டு கோபப்பட்டுக் கொண்டு வன்மத்தோடு அடிதடி கொலை என்று இறங்கி தங்கள் வாழ்வை நாசமாக்கி கொள்கிறார்கள் இந்த படத்திற்கு இறைவி என்று பெயர் வைக்க என்ன காரணம் என்று யோசித்து இருக்கிறேன்.
பின்பு இரண்டாம் முறையாக இந்த படத்தை காணும்போது ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாக கண்ணுக்கு தெரிந்தது
இந்த படத்தில் அத்தனை ஆண்களும் ஒன்று மாண்டு போகிறார்கள் இல்லை ஜெயிலுக்குப் போகிறார்கள்.
ஆனால் அத்தனை பெண்களும் அவர்களுக்கான ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு வாழ்வில் நிலைத்திருக்கிறார்கள்.

இதைவிட பெண்களைப்பற்றி என கூறிவிட முடியும்?
அந்தப் படத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்வில் மிகமிக மோசமான சூழல் வரும்போது கூட நிதானமாக சிந்தித்து தங்களுக்கான சரியான முடிவு எடுத்து பொறுமையுடன் வாழ்வின் ஓட்டத்திற்கு ஏற்றார்போல் வாழ பழகிக் கொள்கிறார்கள்.
ஆனால் அந்த படத்தில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபம் தலைக்கேறி மற்றவரை அழித்து தங்களை அழித்துக் கொள்கிறார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இதுதானே பெரிய வித்தியாசம்?
இப்பொழுது யோசித்துப் பாருங்கள் இந்தியா முழுவதும் ஆண்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?
இந்தியாவில் உள்ள ஆண்கள் முக்கால்வாசி நேரம் கோபமாக இருக்கிறார்கள், தங்களுக்கு நடந்த வஞ்சத்தை நினைத்து குடிக்கிறார்கள், வெறியுடன் சுற்றுகிறார்கள், அதிகமான அளவு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
இதை நான் சொல்லவில்லை தேசிய குற்றவியல் ஆணையம் சொல்கிறது.
கடந்த மாதம் தமிழகத்தை சேர்ந்த 2 இளம் வயது ஆண்கள் குடித்துவிட்டு சண்டை போட்டு அதில் ஒருவன் இன்னொருவனை கத்தியால் குத்தி கொலை செய்துவிடுகிறான். எதற்காக தெரியுமா? கொரோணவுக்காக அதிகமாக நிதி கொடுத்தது அஜித்தா விஜய்யா என்ற சண்டையில்.
இதற்கெல்லாம் ஒரு கொலை நடக்க வேண்டுமா?
இது மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆண்கள் கொதித்தெழுந்து கோபத்தை வெளிப்படுத்த ஒரு சிறு சண்டை கூட போதும் என்றிருக்கிறது.
சிறுவயது முதலே ஆண்களுக்கான கற்பித்தல் இப்படித்தான் இருக்கிறது.
"ஒரு ஆம்பள பையன் கோபப்பட மாட்டானா?
ஒரு பொம்பள உனக்கு இவ்ளோ கோவம் வருது அப்ப ஆம்பளைக்கு எவ்வளவு கோவம் வரும்?
அவன் ஆம்பள கை நீட்டிட்டான்.
அடிச்சாலும் கொண்டாலும் அவன் ஆம்பள ஊர் அவன ஒன்னும் சொல்லாது"
இப்படியாக இந்தியாவில் ஆம்பளை தனம் வளர்க்கப்படுகிறது.
ஆம்பள என்றால் அதிகமாக கோபம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அதற்கு வீரம் என்று கேவலமான ஒரு பெயர் வைக்கப்படுகிறது.
அதுபாட்டுக்கு எங்கேயாவது ஓடிக்கொண்டிருக்கும் மாட்டை அடக்க வேண்டும்...
தவறு செய்யும் பெண்டாட்டியை கையை நீட்டி அடிக்க வேண்டும்.
ரோட்டில் செல்லும் பொழுது எவனாவது வண்டியில் மோதி விட்டால் அவனோடு அமைதியாக விவாதிக்க கூடாது நேராக அடிதடியில் இறங்க வேண்டும் சமரசம் செய்து கொண்டால் அவன் ஆம்பளை கிடையாது.
"என்னடா பொம்பள மாதிரி காசு வாங்கிட்டு வந்துட்ட?" என்று நண்பர்கள் கேட்பார்கள்.
சமரசம் ஆண்களின் குணாதிசயம் இல்லை என்று இந்த சமூகம் சிறுவயதில் இருந்தே ஆண்களுக்கு சொல்லி வளர்க்கிறது.
அதிலும் குறிப்பாக தவறு செய்த ஒருவனை தண்டிக்க அவன் குடும்பத்து பெண்களின் மீது வன்மத்தையும் வன்முறையையும் கட்டவிழ்க்கலாம் என்று ஆணின் மனதில் பதிய வைக்கப்படுகிறது.
அதனால்தான் இன்னொரு ஆணுடன் சண்டை என்ற போதுகூட அவனை விட்டுவிட்டுஅம்மா தங்கை அக்கா என்று அவன் வீட்டுப் பெண்களின் மீது வன்மத்தை கக்குகிறான்.
இந்தியாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
பெண் உடல் அவர்களுக்கு அதிகாரத்தை செலுத்த மிக சிறந்த இடம்.
நேற்று ஜெயஸ்ரீக்கு நடந்த வன்முறைக்கு முக்கிய காரணம் இந்த "ஆம்பளைத்தனம்தான்".
இந்த ஆம்பளை தனம் அவர்களுக்கு எல்லா வன்முறையும் நிகழ்த்திக் காட்ட ஒரு லைசென்ஸ் ஆக அமைகிறது.
அதற்கு பலியாவது பெண்கள்.
இன்று ஜெயஸ்ரீயின் மீது வன்முறையை கட்டவிழ்த்த ஆண்களின் வீட்டு பெண்களின் மீது மற்றொரு ஆண் வேறுவிதமான வன்முறையை நிகழ்த்துகிறான்.
இந்த ஆம்பளை தனம் ,கோவம், வெறி வன்முறை, பாதிப்பு இதெல்லாம் ஒரு வட்டமாக சுழலுகிறது.
இதைத்தான் பெண்ணுரிமை பேசும் பலரும் நீங்கள் கிண்டலாக "பெண்ணியவாதிகள்" என்று குறிப்பிடும் பெண்களும் தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.
பெண்களின் மீதான வன்முறைக்கு காரணம் இந்த அதீத ஆம்பளை தனமும் ,அதீத கோபமும்,வெறியும் தான்.
பெண்களை சமமாக நினைக்காத வரையில் ,தான் தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் வரையில் ஆண் அதிகமாக கோவப்படுவான்,அதிகமாக வெறியோடு வெறி செயல்களில் ஈடுபடுவான்.
இதைத்தான் பெண்ணியவாதிகள் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறோம்.
ஆக.. யாராவது பெண் கொலை செய்யப்பட்டால் உடனே "ஏன் இந்த பெண் போராளிகள் எல்லாம் இதற்கு குரல் கொடுக்க வில்லையா?!" என்று கேட்டு கொண்டே இருக்காதீர்கள்.
நாங்கள் வேரிலிருந்து ஆராய்ந்து சரி செய்து கொண்டிருக்கிறோம். மேல் பூச்சு பூச ஒரு கண்டன பதிவு போதும். அது எங்களுக்கு தேவையில்லை.
இது போன்ற பல வன்முறைகளுக்கான தீர்வே பெண்ணியம்.
தலைக்கு சுர்ரென ஏறும் காமமோ, ஆத்திரமோ...ஆண்களுக்கு அதை கட்டுப்படுத்தி கையாள தெரிய வேண்டும்.
அதற்காக அவர்களுக்கு பெண்களை போல சில சமயங்களில் சிந்திக்க தெரிந்திருக்க வேண்டும்.
பொம்பளத்தனம் தப்பு இல்ல சா

கருத்துகள் இல்லை: