திங்கள், 11 மே, 2020

அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி- ஒரு ராஜஸ்தான் கிராமத்தின்

இப்போது பெண் குழந்தைகளை ஸ்கேன் செய்து பார்த்து அழிப்பதால் . எதிரகாலத்தில் ஒரு பெண் இரண்டு கணவர்களை திருமணம் செய்யவேண்டிய நிலை வரும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்
அனைத்து ஆண்களுக்கும் இரு மனைவியர்; ஒரு கிராமத்தின் வினோத பழக்கம் மாலைமலர்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி என்ற வினோதமான பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேரசர் என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.
அந்த கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து  ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். இது ஒன்றும் அவர்கள் பின்பற்றும் மத சடங்கு இல்லை. இந்த பகுதியில் வாழும் மக்களின் நம்பிக்கையாகவே மாறியிருக்கிறது.
அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது திருமணமும் செய்ய வேண்டுமாம். ஏன் என்றால் முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.
அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
கிராமத்தில் நிறைய பேர் தங்கள் முதல் மனைவியுடன் ஒரு குழந்தையைப் பெறுவதற்காக தங்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி வரை காத்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், மீண்டும் திருமணம் செய்துகொண்டபோது, குழந்தைகளைப் பெறுகிறார்கள்.
அப்படி பல ஆண்டுகளாக முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஒரு நபருக்கு, இரண்டாவது மனைவி மூலம் 3 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
ஒருவர் இரண்டு முறை திருமணம் செய்து கொள்ள ஒரே காரணம் இதுதான். இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது மனைவியுடன் பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையை உணருவது இல்லைஇரண்டு திருமணம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. கிராமத்து பெண்கள் குடிநீரை சேகரிக்க ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டருக்கு மேல் மலையேற வேண்டும்.
கர்ப்பமாகிவிட்ட பிறகு ஒரு பெண் தண்ணீர் எடுக்க இவ்வளவு தூரம் நடக்க முடியாது. எனவே, வீட்டு வேலைகளை செய்வதற்கும், நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருவதற்காகவும் அவரது கணவர் வேறொரு பெண்ணை மணக்கிறார்.
ஆண்கள் இரண்டு திருமணம் செய்யும் பழக்கம் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக உள்ளது.

கருத்துகள் இல்லை: