வியாழன், 14 மே, 2020

இந்திய கிராமங்களின் வறுமை .. சோமாலியாவை நெருங்குகிறது பட்டினி சாவை நோக்கி ?


ஊரடங்கு: கிராமப்புறங்களின் இன்றைய நிலை - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
கிராமங்களின் வறுமையை வளர்ச்சி என்போர் 
மின்னம்பலம் : ஊரடங்கு காரணமாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்றும், கிட்டத்தட்ட 29 சதவிகிதக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியை விட்டு வெளியேற வைப்பதாகவும் ‘கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கை கிராமப்புறங்கள் எவ்வாறு சமாளிக்கிறது’ என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த ஆய்வை பர்தான் என்ற அமைப்பு நடத்தியது. சமூக முன்னேற்றத்துக்கான நடவடிக்கை குழு, பிஏஐஎஃப், டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா அறக்கட்டளை, கிராமீன் சஹாரா, சாதி - உத்தரப்பிரதேசம், விகாஸ் அன்வேஷ் அறக்கட்டளை, சம்போடியின் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அகா கான் கிராமிய ஆதரவு திட்டம் (இந்தியா) ஆகியவையும் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டன.

ஏப்ரல் 28 முதல் மே 2 வரை 12 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 5,162 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு செய்தவர்கள் மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், பீகார், அசாம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பல கிராமங்களில் வீடுகளுக்குச் சென்றனர்.
ஆய்வில் கிராமப்புற வீடுகளில் அவர்களில் பாதி பேர் 50 சதவிகிதத்துக்கும் குறைவான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதும், நெருக்கடியைச் சமாளிக்க குறைந்த வேளை சாப்பிடுவதும் கண்டறியப்பட்டது.
பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் வரவிருக்கும் காரீஃப் பருவத்துக்கான விதைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட பாதி பேர் பயிர்க் கடன்களைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விதை மற்றும் கடன் வழங்கல் உள்ளிட்ட காரீஃப் பருவத்துக்கான அரசாங்க ஆதரவுக்கு இந்த ஆய்வு முக்கியத்துவம் அளிக்கிற 68 சதவிகிதக் குடும்பங்கள் தங்கள் உணவில் உணவுப் பொருட்களைக் குறைத்துவிட்டதாகக் கூறியுள்ளன.
50 சதவிகிதக் குடும்பங்கள் ஒரு நாளில் சாப்பிடும் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டன. 24 சதவிகிதக் குடும்பங்கள் உணவு தானியங்களை கடன் வாங்கியுள்ளன. 84 சதவிகிதக் குடும்பங்கள் ரேஷன் மூலம் கிடைத்ததாகக் கூறினாலும், ஆறில் ஒரு குடும்பம் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஊரடங்கு வருமானத்தைப் பாதிக்கும் அதிகமாகக் குறைத்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட 22 சதவிகிதக் குடும்பங்கள் பணக்காரக் குடும்பங்களிடமிருந்தும், 16 சதவிகிதம் பணம் கடன் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. 22 சதவிகிதம் கால்நடைகளை விற்பனை செய்வதன் மூலம் பணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 14 சதவிகிதம் பேர் வீட்டுப் பொருட்களை அடமானம் வைத்துள்ளனர்.
கிராமப்புற வீடுகளில் குழந்தைகளின் கல்வியில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது. விருப்பப்படி எந்த செலவுகளை ஒத்திவைப்பீர்கள் எனக் கேட்டால், கிட்டத்தட்ட 29 சதவிகிதக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியை விட்டு வெளியேற வைப்பதாகக் கூறின.
கணக்கெடுக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்களில், புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் இன்னும் திரும்பவில்லை. கணக்கெடுக்கப்பட்ட 17 சதவிகித வீடுகளில், புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் திரும்பி வந்துள்ளனர்.
பெண்களுக்குக் கூடுதல் வேலை சுமை இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 62 சதவிகித வீடுகளில் பெண் உறுப்பினர்கள் தண்ணீர் எடுக்க அதிக பயணங்களை மேற்கொண்டதாகவும், 68 சதவிகித வீடுகளில் பெண்கள் விறகுகளை சேகரிப்பதில் அதிக நேரம் செலவழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-ராஜ்

கருத்துகள் இல்லை: