செவ்வாய், 12 மே, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாகி விட்டதா?

மாலைமலர் :மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது.
இந்தியாவில் சமூக பரவலாகி விட்டதா கொரோனா?-

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 70,756  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3604 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2293 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாகி விட்டதா? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு (ஐசிஎம்ஆர்) நடத்துகிறது.

இந்த ஆய்வு நாடு முழுவதிலும் உள்ள 69 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: