செவ்வாய், 12 மே, 2020

தா. பாண்டியன் : நானே புலிகளை சரணடைகிறோம் என்று கூறாமல் ஆயுதங்கள் மௌனமாகின்றன என்று கூறுங்கள் என்றேன்

வீரகேசரி  :  நான்காம் ஈழப்போர் காலத்தில் உங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளனவே?

தா. பாண்டியன் : நான்காம் ஈழ போராட்ட காலங்களில்  எனக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இருந்தது  உண்மைதான்.
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் என்னுடன் தொடர்ச்சியான தொடர்புகளை கொண்டிருந்தார்.
சில அறிக்கைகளை வரைகின்றபோது அவர் என்னுடன் கலந்துரையாடுவார் . அது தொடர்பான ஆதாரங்களும்  என்னிடம் உண்டு.
இவ்வாறான நேரத்தில்தான நடேசன் என்னிடத்தில் தங்களை சரணடையுமாறு கோருகிறார்கள் . என்ன செய்வது என்பது குறித்து என்னிடத்தில் ஆலோசனை நடத்தினார் .
உங்களின் நெருகடியாயான நிலைமைகளை அறியாது  நான் தீர்க்கமாக பதிலளிக்க முடியாது என்றேன்.

இருப்பினும் சரணடைகின்றேன் என்று எழுத்து மூலம் வழங்காது எனது ஆயுதங்களை மௌனமாகின்றன என்று எழுத்து மூலமாக வழங்குங்கள் என்று ஆலோசனை வழங்கினேன்.
அதனை அறிக்கை வரைவாக அனுப்புமாறும் கோரினார்.
அச்சமயத்தில்  நான் அனுப்பி வைத்தேன் .
அதனை தொடர்ந்து ஓரிரு நாட்களின் பின்னர்  : தான் வாகனத்தில் ஏறி வெள்ளை கொடியுடன் செல்கிறேன் என்றும் கூறினார்.
நடுவழியில் என்னையும் வாகனத்தையும் மறித்து விட்டார்கள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை .. என்பது நடேசன் என்னுடன் பேசிய இறுதி வார்த்தைகளாக் இருக்கின்றன .
இதனை விட பல போராளிகளும் மக்களும்  ஊர் பேர் சொல்லாது , நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றுவீர்களா ? அடுத்து என்ன செய்யலாம்?
நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் .எப்படி உயிரை காப்பாற்றுவது ?
போன்ற கேள்விகளுடன் எங்களை தொடர்பு கொண்டார்கள்.
அச்சமயத்தில் போர்க்கள சத்தத்தையே என்னால் கேட்க கூடியதாக இருந்தது  இந்த முழு பேட்டியையும் கீழ்க்கண்ட  இணைப்பில்  பார்க்கலாம் .
 https://www.virakesari.lk/article/33335

கருத்துகள் இல்லை: