tamil.oneindia.comசென்னை: சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகள் வழங்க
வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் வேண்டுகோள் மற்றும் கருத்துகளை எடுத்து வைத்தார் அவர் கூறுகையில், 0.67 சதவீதம் என்ற அளவுக்குத்தான் தமிழகத்தில், கொரோனா இறப்பு விகிதம் உள்ளது. பல நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர் எண்ணிக்கை 27 சதவீதமாக இருக்கிறது. இந்திய அளவில் இது நல்ல விகிதம் ஆகும். அதே நேரம் சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 31-ஆம் தேதி வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.
சென்னைக்கு மே 31-ஆம் தேதி வரை விமான சேவைகளையும் துவங்க வேண்டாம். மேலும் நோய் தடுப்புக்கு உடனடியாக 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் போதும் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பதற்கு முதல்வர் அனுமதிக்கவில்லை. ஆனால் டீக்கடை மற்றும் பிற கடைகள் திறப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் விமானம் மற்றும் ரயில் சேவையை சென்னைக்கு நீட்டிக்க வேண்டாம் என்றும் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம், மே 17ஆம் தேதி லாக்டவுன் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில், அதிலும் குறிப்பாக, சென்னையில் பஸ் சேவையை தமிழக அரசு அறிமுகம் படுத்தாது என்றே தெரிகிறது. எனவே தான் ரயில் சேவை மற்றும் விமான சேவையை சென்னைக்கு நீட்டிக்க வேண்டாம் என்று உறுதியாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக