வியாழன், 14 மே, 2020

கண்ணீருடன் வெளியேறினார் பாலசிங்கம் கருணா பிரிவு இயக்கத்தின் அழிவின் தொடக்கம்

வளன்பிச்சைவளன் : அன்ரன்பாலசிங்கம் யோசனைகள் நிராகரிக்ப்பட்டன! கண்ணீருடன் வெளியேறினார் பாலசிங்கம் கருணா பிரிவு இயக்கத்தின் அழிவின் தொடக்கம்  ஈழத்தில் இருந்து ஓர் குரல்
புரஜக்ட் பீகானைப் பற்றிய சகல விளக்கமும் இரண்டாம் கட்டப்பேச்சுவார்தை முறியும் நிலைவந்த போது..அன்ரன் பாலசிங்கத்து க்கும் கருணாவிற்கும்..வடிவாக விளங்கப்படுத்தப்கட்டபோது அதை அவர்கள் இருவரும் நண்குணர்ந்த நிலையில்... இலங்கைவந்து வன்னியில்
தலைவருடன் சொன்னபோது அதை தமிழ்செல்வன் பொட்டம்மான் குழுக்கள் எதிர்த்தன கருணாம்மான் 500 கோடி வாங்கிவிட்டார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது..மத்தயாவுக்கு நடந்த்துதான் தனக்கும் நடக.கப்போவதை உணர்ந்து தனது மட்டக்களப்பு குரூப்பை வன்னியிருந்து பின்வாங் கினார்..புரஜக்ட்படி கிழக்கில் வடக்குப்புலிகளின் புலிவேட்டை ஆரம்பமானது ..கரிகாலனுடன் பலரை பிடித்து படகு மூலம் வன்னிக்கு கொண்டுவரப்பட்ட னர் கருணாவின் ஆட்கள. பலர் வேட்டையாடப்பட்டனர்..கருணா அரசபடைகளிடம் சரண்டைந்து.. அரச படையினர் அவரை தமது திட்டத்தில் இணைத்து கொண்டனர்..ஐயா பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் தான் நோய்வாய்ப்பட்டதாகவும்..விடுமுறை கோரி வேட்டியுடன் கடித்த்தை பிரபாகரனிடம் கொடுத்நபோது..அவரை அவமானப்படுத்தி பேசியது மட்டுமல்ல..விடுதலைப் புலிகளுக்கு விடுதலை.. விடுமுறை யெல்லாம் மரணத்தில்தான் என்று சொன்ன செய்திவடமாகாண ஊடகங்களில்வந்த்துபடத்துடன்..தலைவர்ட . குரூப்பில் தமிழ்செல்வன்..பொட்டம்மான் ஆட்களே மிஞ்சிய ஆட்கள்..அவரகளில் சிலர். அன்ரனய்யாவுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி அவர் மரணத்துக்கான ஏற்பாடுகள் சிலவற்றைசெயதிருந்தனர்..

நோய் கூடியது அவருக்கு தலைவர் கூறிய விடுதலை கிடைத்தது..அமெரிக்கா தனது ..உலக பயங்கரவாத அமைப்புகளுக்கெதிரான தயாரிக்கப்பட்ட புராஜக்ட் பிகானை இலங்கையில் டிரயல்.பார்த்து வெற்றிகண்டு.. அதன்பின் இதன் 2. 3 வது பிரஜக்ட்களை.ஒசாமா..  இன்னும் இரு பயங்கரவாத இயக்கங்களுக்கெதிராக வெற்றி கன்டதே உண்மை..
ஐ.நா என்பதென்ன அமெரிக்காவின் ஆதரவு நாடு களின் பெரும்பான்மை ஆதரைவை் க்கொண்ட நிறுவனமே..ஆட்டிப்படைப்பது அமெரிக்காவின் புரஜெக்ட்களே..
இக் கட்டுரையாளர் ஈழத்தைச் சேர்ந்தவர்.
"கூர்வாளின் நிழலில் இருந்து"
விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதிய நூலில் இருந்து.
ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமாதான முன்னெடுப்புகள் ஒரு புறம் இருக்க, இயக்கத்தின் உள் கட்டமைப்புகளில் பல மாறுதல் கள் ஏற்ப்பட தொடங்கின. அதில் முக்கியமானது இயக்கத்தின் ஆளணி பலத்துடன் தொடர்பு டையது, இயக்கத்தின் ஆணி வேரே அதில்தான் அடங்கிய ருந்தது. அது கொஞ்சம் கொஞ்ச மாக ஆட்டம் காணத் துவங்கி இருந்தது. கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் தன்னுடைய கட்டுப் பாட்டில் இருந்த ஆயிரக்கணக் கணக்கான போராளிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தில் இருந்து பிரிந்து செல்வ தாக அறிவித்து இருந்தார். அதிகம் வெளிக்காட்டிக் கொள் ளப்படா விட்டாலும், அந்நிகழ் வானது இயக்கத்திற்குள்ளேயே பேரதிர்வை ஏற்படுத்தி இருந்த து. இயக்கத்தின் செல்வாக்கு மிக்க முதன் நிலைத் தளபதி யாக கருணா அம்மான் இருந் தார் அவருடன் செயல் திறன் மிக்க போராளிகள் மற்றும் இள நிலைத் தளபதிகள் பலர் இருந் தனர். வன்னி களமுனைகளின் பல வெற்றிகளில் அவர்கள் தமது பலமான முத்திரைகளை பொறித்திருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந் நிலையில் இயக்கத்தின் அரைப் பங்கு இராணுவ பலம் கருணா அம்மானின் பிரிவோடு இழக்கப் பட்டு விட்டது.
2004 ஏப்ரலில் விடுதலைப் புலிகள் இயக்க த்தில் கருணா அம்மானின் பிரிவு ஏற்பட்ட போது, அம்மாதம் நடக்க இருந்த நாடாளுமன்ற பிரச்சார வேளைகளில் நான் யாழ்பாணத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தேன். தமிழர் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி புலிகளின் ஆதரவுடன் அவர்களை தேர்தலில் வெற்றி யடையச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் சக்தி புலிகளு க்கு பின்னால் இருக்கின்றது என்ற செய்தியை வெளிப்படுத் துவதுடன் பாராளுமன்ற தீர்மா னங்களில் தமது செல்வாக்கை யும் நிலை நிறுத்தலாம் எனப் புலிகள் கருதினார்கள்.
யாழ்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இளம் பரிதி இருந்தார் அவருக்கு உதவியாக வன்னி யில் இருந்து நானும் வேறு போராளிகளும் அனுப்பிட்டு இருந்தோம். ஞாபகம் இல்லாத ஒரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் போராளிகளுக் கான இரகசிய கூட்டம் ஒன்றை இளம் பரிதி அவசரமாகக் கூட்டி இருந்தார்.
"ஒரு முக்கியமான விடயத்தை உங்களுக்கு சொல்லும்படி கிளிநொச்சியில் இருந்து அவசரமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. எங்கட இயக்கத்தின் மட்டக்களப்பு - அம்பாறை தளபதி கருணா அம்மான் தன்னோடு இருக்கிற ஆறாயிரம் போராளிகளோடு இயக்கத்தில் இருந்து பிரித்து போறதாக அறிவித்திருக்கிறார் "என்ற செய்தியை இளம்பரிதி அங்கிருந்த அனைத்து போராளி களுக்கும் தெரிவித்தார்.
அனைவரும் விறைத் துப் போனவர்கள் போல் அசை வின்றி உட்கார்ந்து இருந்தார் கள். இந்த வார்த்தைகளை கேட்ட பின்பு அங்கு பேசப் பட்ட வேறு எந்த விடயங்களும் என் னுடைய காதுகளுக்குள் ஏறவே இல்லை. அந்த நிமிடம் #இயக்கமே அழிந்துபோனது போன்ற உணர்வு தான் எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஏனென்றால் அத்தகைய பலமான சக்தியாக கிழக்கு மாகாண போராளிகள் விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் இடம் பிடித்து இருந்தார்கள். கிளிநொச்சியில் இருந்து அடுத்த தகவல் வரும் வரை தேர்தல் பொதுக் கூட்டங் களை நிறுத்தி வைக்கும் படி அறிவிக்கப் பட்டிருந்தது இரண்டு முழுநாட்கள் கொக்கு வில் பொற்பதி வீதியில் அமை ந்து இருந்த எமது முகாமுக்குள் எதுவும் செய்ய மனமின்றியும் பொதுமக்களது கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமலும் முடங்கி இருந்தோம்
அந்த சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் பிரதி தலைவராக இருந்து கைது செய்யப்பட்ட, பின்னர் இல்லாமல் ஆக்கப்பட்ட மாத்தையா அண்ணருடைய நினைவுகள் மீண்டும் எனக்குள் ஏற்பட்டன.#ஒருவருக்கான தண்டணை இதுதான் என இயக்கம் தீர்மானித்து விட்டால், அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் தலைவருக்கு எதிராக சதி செய் தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றம் இழைத்தார் என்பன வைகளே ஆகும். ஆரம்பத்தில்
ஏனைய விடுதலைப் போராட்ட
இயக்கங்களைத் தடை செய் வதற்கும் இவ்வாறான குற்றச் செயல்களே அவர்கள் மீது சுமத் தப்பட்டு இருந்தன. என்பதையும் அறிந்து இருந்தேன். உண்மை யாகவே கிழக்கு மாகாணத் தளபதிக்கும் இயக்கத்தின் தலைவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது எனக்கு மட்டு மல்ல, பெரும்பாலான போராளி களுக்கும் கூடச் சரிவரத் தெரியாத மர்மமாகவே இருந்தது.
மட்டு - அம்பாறை தளபதியான கருணாவுக்கு புலிகள் இயக்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னர், அங்கிருந்து சில போராளிகள் இயக்கத் தலைமை மீது கொண்ட விசுவாசம் காரணமாக வன்னிக்கு வந்து சேர்ந்து இருந்தனர். அவர்களை யும் இணைத்துக் கொண்டு "கிழக்கு மாகாண போராளி களை மீட்டெடுக்கும் நடவடிக் கைகள் என்ற பெயரில் இயக்க த்திற்குள்ளே ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப் பட்டது.
பல வருடம் என்னுடன் பழகிய போராளிகள் இரு தரப்பி லும் உயிரிழந்து போயிருந்தனர் இயக்கத்தை  நம்பிச்சரணடைந்திருந்த  மட்டு - அம்பாறை மகளிர் தளபதிகளாய் இருந்த சப்தகி (சாளி) உட்பட்ட நான்கு பெண் போராளிகளும் இயக்கத் தின் புலனாய்வு துறையினரின் சிறைகளில் அடைக்கப் பட்டு பின்னர் மரணதண்டனை க்கு உள்ளாக்கப் பட்டதாக அறிய முடிந்தது. இயக்கத்தின்  போரிடும் வல்லமையானது  இத்தகைய மூர்க்கத்தனமான களை யெடுப்புகளாலும் சிதையத் தொடங்கியிருந்தது.
விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் நீண்ட காலப் போராளிகள் பலர் பல போர்களில் பலத்த காயம் அடைந்திருந்தனர் அத்துடன் பல இடைநிலைப் பொறுப்பாளர் களும் போராளிகளும் தனிப் பட்ட காரணங்களை முன் வைத்து இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றார்கள் நானறிந்த வரையில் பல ஆண் மற்றும் பெண் போராளிகள் தமது குடும்ப வறுமை காரண மாகவும் பெற்றோரின் வற்புறு த்தல் காரணமாகவும் இயக்க த்தில் இருந்து விலகினார்கள். வேறு பல போராளிகள் காதல், திருமணம் போன்ற உறவுகளில் தம்மை இணைத்துக் கொண்ட னர். தாக்குதலணியில் அனுபவம் வாய்ந்த போராளி களின் வீதம் இக் காரணங்க ளால் குறைந்து கொண்டே சென்றது.
இறுதியாக நடந்த சமாதானப் பேச்சு வார்த்தைக ளின் போது அதிகார பரவலாக் கப்பட்ட அரசில் தீர்வை எப்படி யாவது பெற்று கொடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன்
அமைந்த சமஷ்டி என்ற கருத்தை பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன் வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனு க்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு அரசியல் தீர்வை த்திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடம் இருந்து பிடுங்குவகுவதற்கு சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றஞ் சாட்டினார்.

அவர்கள்  விரித்த வலையிக்குள்  அன்ரன் பாலசிங்கமும் சிக்கி விட்டதாக அவர் கருதினார்.
தனக்கு மரணம் ஏற்பட்டாலன்றி  வேறு எந்த காலக்கட்டத்திலும்
ஆயுதங்களை கையைவிட்டு இழப்பதற்கு தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை.
அதனால் இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, ஒருவ ரோடு ஒருவர் முகம் கொடுத்து
பேசிக் கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில் மிகவும் மனம் உடைந்த பாலசிங்கம் இறுதியாக கிளிநொச்சியை விட்டு வெளியேறியிருந்தாரர். வழமையாக உலங்கு வானூர் தியில் ஏறிச் செல்லும் போது இருக்கக் கூடிய சிரிப்பும் மகிழ் சசியும் மறைந்து போய் அவரதும் அவருடைய துணை வியர்#கண்களிலும் கண்ணீர்
கசிவுகள் தென்பட்டதை பலரும் அவதானித்தோம்.

கருத்துகள் இல்லை: