Chinniah Kasi : புதுதில்லி: பிரதமர் மோடி, அண்மையில் அமெரிக்காவுக்கு
சென்றுவந்ததற்குப் பின், “அமெரிக்காவில் மோடி அளவிற்கு வேறெந்த இந்தியப்
பிரதமரும் மதிக்கப்பட்டது இல்லை” என்று பாஜகவினர் பிரச்சாரம்செய்து
வருகின்றனர். நாளுக்குநாள் இது அதிகரித்துக் கொண்டேவும்
செல்கிறது.இந்நிலையில், ‘பிரதமருக்குதான் மரியாதையே தவிர, தனிப்பட்ட
மோடிக்கு மரியாதை அல்ல’ என்ற தலைப்புடன், சமூகவலைத்தளங்களில்
வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ்
கட்சியினர் இந்த வீடியோவை பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.
“மோடிக்கு முன்னதாக, உலக நாடுகள் மத்தியில் இந்தியப் பிரதமர்களுக்கு மரியாதையே இருந்தது இல்லை என்று பெருமை பீற்றும் பாஜக-வினருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த வலைத்தளபதிவில்: 34 ஆண்டுகளுக்கு முன்பு 1985இல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அமெரிக்கா சென்றிருந்த போது, அவருக்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் குடை பிடித்து, கார் வரைசென்று வழியனுப்பி வைக்கும் வீடியோ பதிவேற்றப்பட்டு உள்ளது. அந்த வீடியோவின் கீழ், “மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும் இந்தியா இருந்தது! அது இதைவிட சிறப்பானதாகவும், உலக அரங்கில் பெரும் மரியாதைக்கு உரியதாகவும் இருந்தது என்பதற்கு இந்த வரலாறே சாட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக