
முதலில் யார் நீங்க ? உங்க குடி என்ன? பூர்வீகம் என்ன? குலதெய்வம் என்ன? மூன்று தலைமுறைகள் பெயர் என்ன?

எனது பூர்வீகத்தை அறிய வேண்டும்.. ஓலைச்சுவடி இவர் என்ன செய்கின்றார்..
என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் தமிழக சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
எனக்கு வரிசையாக அடுத்த சில தினங்கள் பல்வேறு தமிழ் தொடர்பான ஆய்வுப் பணிகள் தமிழகத்தில் உள்ளன.
நானும் எனது தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களும் செய்கின்ற பணிகளில் ஒரு பத்து விழுக்காடு பணியையாவது நீங்கள் செய்தால் தமிழ் மக்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் பயன்படும்.
அதனை செய்யுங்கள்.!
நல்ல காரியங்களைச் செய்து புகழ் பெறுவது ஒருவகை.
நல்ல காரியங்கள் செய்பவர்களை குறைகூறி அதன்மூலம் தனது பெயரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சி செய்வது மற்றொரு வகை. இது தவறு. நம் தமிழ் சமூகத்திற்கு இதனால் எந்த பலனும் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உங்கள் கவனத்தை முழுமையாக கல்வி வளர்ச்சியிலும் தமிழ் வரலாற்று பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குவித்து செயல்படுங்கள். அது தான் இன்றைய தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக