
1,26,728 பேருக்கு பணிநியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது. அதன்படி, இந்தச் செயலகங்களில் 500 வகையான பொது சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான சேவைகளும் நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்படும்.
விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாநிலம் முழுவதும், கிராம மற்றும் நகர்ப்புற வார்டு செயலகங்கள் டிசம்பர் முதல் வாரத்திலிருந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா முழுவதும் 11,158 கிராம செயலகங்களும், 3,786 வார்டு செயலகங்களும் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு செயலகத்திலும் 10 முதல் 12 ஊழியர்கள் இருப்பார்கள். மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைக்காக ஒரு பெண் போலீஸும், பெண்கள் நல உதவியாளரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக