புதன், 2 அக்டோபர், 2019

தூர்தர்ஷன் சென்னை உதவி இயக்குனர் வசுமதி திடீர் நிறுத்தம் .. மோடி நிகழ்ச்சியில் அலட்சியம்

காந்திக்கும் காந்திய கொன்ற கோட்சேவுக்கும்.
R Vasumathi suspended, Doordarshan kendra chennai R Vasumathi, சென்னை தூர்தர்ஷன், ஆர்.வசுமதி சஸ்பெண்ட்tamil.indianexpress.com :முன் அனுமதி பெறாமல்
சென்னையை விட்டு, வசுமதி வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
Chennai Doordarshan Assistant Director R Vasumathi Suspended: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் சென்னை உதவி இயக்குனர் வசுமதி திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் சென்னை கேந்திர உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் ஆர்.வசுமதி. இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் பிரசார் பாரதியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஷஷி சேகர் அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கை காலத்தின் முன் அனுமதி பெறாமல் சென்னையை விட்டு, வசுமதி வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.


தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி சஸ்பெண்ட்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன், பொதிகை சேனல்கள் சரியாக நேரலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையிலேயே வசுமதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனினும் நடவடிக்கைக்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.


nakkheeran.in - அதிதேஜா : தூர்தர்ஷன் சென்னை பிரிவின் உதவி இயக்குநர் (திட்டம்) ஆர்.வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  மத்திய சிவில் சேவைகள் (வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 10-இன் விதி 10 (1)-இல் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம், பணியிடை நீக்க உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், டெல்லி பிரசார் பாரதி செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் வேம்பதி. முன் அனுமதி பெறாமல் வசுமதி தலைமையகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அந்த ரகசிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

pothigai program on the package is not live! Sacking of female officer
ஏன் இந்த நடவடிக்கையாம்? கடந்த 30-ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு சிங்கப்பூர் – ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடியின் பேச்சை நேரலை செய்ய சென்னை தூர்தர்ஷன் தவறிவிட்டது. அந்தக் காரணத்துக்காகவே, வசுமதி நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார் என்று தூர்தர்ஷன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரகசிய உத்தரவெல்லாம் அம்பலமாவதுதானே டிரெண்ட்? விளம்பரம்.. ஸாரி..  பாரத பிரதமர் ஆற்றிய உரையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு தூர்தர்ஷனே ஆர்வம் காட்டவில்லையென்றால் விட்டு வைப்பார்களா<

கருத்துகள் இல்லை: