.nakkheeran.in - kalaimohan :
திருச்சி
லலிதா ஜூவல்லரி நகை கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் தான்
எனவும், இரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும்
காவல்துறையினர் சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
அருகே உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பு
மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சுவரில் துளையிடப்பட்டு இரு
கொள்ளையர்கள் உள்ளே சென்று நகைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகளும்
கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்கள் தான் எனவும், இன்னும் இரண்டே தினங்களில் அந்த கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக