செவ்வாய், 1 அக்டோபர், 2019

கீழடி மட்பாண்ட சிறு கீறல்கள் .. வரலாற்றை கூறும் நூலங்கள் ... அந்த காலத்து கூகிள்கள்!

கீழடி ..மட்பாண்ட சிறு கீறல்கள்!
அச்சிறு மண் பாத்திரங்களில் உங்கள்  பெயர்களை செதுக்கி வைத்த எங்கள்  முன்னவர்களே!
அவை வெறும் மட்பாண்டங்கள் அல்ல  காலவெள்ளத்தில் காணமல் போகாமல் மீண்டும் முளைத்து வந்து  எழுந்து நிற்கும் வரலாற்று கோபுரங்கள்!
 தொலைந்து போக கூடாது என்று பெயர்களை கீறிய பெருமக்களே !
அந்த சிறு கீறல்கள்  உலகம் இதுவரை பார்த்திராத வரலாற்று பொன்னேடுகள்!
நீங்கள் ஒரு நாகரீகம் அற்ற நாடோடி கூட்டங்கள் அல்ல ..
நாடும் நகரமும் நல்ல வாழ்வியலும் கொண்ட மண்ணின் மனிதர்கள் ..
இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் .
உங்களுக்கு கற்று கொடுக்க வேறொருவரும் தேவையில்லை.
எல்லோர்க்கும் கற்றுகொடுக்கும் கல்வியும் நல்ல குணமும் உங்களிடம் இருந்திருக்கிறது!
அதை அங்கு நீங்கள் விட்டு சென்ற எச்சங்கள் காட்டுகின்றன!
கொஞ்சம் அசந்து விட்டால் ஆயிரமாயிரம்  கட்டுகதைகள் ..
அத்தனையும்  பூர்வகுடிகளை அடிமைப்படுத்தும் வஞ்சக வேதங்கள் !
வகுப்பு பேதங்கள்!
அத்தனை புரட்டுக்களையும் புரட்டி போட்டுவிட்டன அந்த எச்சங்களும் அதில் இருக்கும் அந்த சிறு சிறு கீறல்களும் !
அவை வெறும் சிறு  கீறல்கள் அல்ல ..குறைந்த பட்சம் மூவாயிரம் வருட வரலாற்றை கூறும்  நூலகங்கள ..
நம் முன்னோர் காலத்து கூகிள்கள்


கருத்துகள் இல்லை: