ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

பிரித்தானியா தமிழர் மலேசியாவில் சுட்டு கொலை ..

Family demands answers after British resident shot dead by police in Malaysia During holiday, Janarthanan Vijayaratnam was killed with two other men and his wife is now missing
காரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான மனைவி- காவல்துறையினர் பொய்சொல்வதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு screenshot 2019 09 23 17 27 47 057111994691217020019வீரகேசரி : காரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான மனைவி-
காவல்துறையினர் பொய்சொல்வதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான ஜனார்த்தனம்  விஜயரட்ணம் 40  என்பவர் 14 ம் திகதி மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் பயணம் செய்துகொண்டிருந்த காரை மலேசிய காவல்துறையினர் துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவேளை ஜனார்த்தனனும் அவரது உறவினரும் மலேசிய பிரஜையொருவரும் கொல்லப்பட்டனர்.
ஜனார்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதேவேளை அவரது மனைவி காணாமல்போயுள்ளார்.
செலங்கூரிற்கு அருகில் உள்ள பகுதியில் காரை நிறுத்துமாறு தாங்கள் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ள மலேசிய காவல்துறையினர் இதன் போது காரில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாகவும் இதனை தொடர்ந்து தாங்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்  மூவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனார்த்தனனின் குடும்பத்தவர்கள் மலேசிய காவல்துறையினர் தெரிவிப்பதை நிராகரித்துள்ளனர்.
மலேசிய காவல்துறையினர் முக்கிய விடயங்களை மறைப்பதாக குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூவருடைய மார்புபகுதியிலும்துப்பாக்கி காயங்கள் காணப்படுகின்றன ஒருவருடைய தலையில் காயம் காணப்படுகின்றது இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது என ஜனார்த்தனனின் குடும்பத்தினரின் சட்டத்தரணி பொன்னுசாமி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தாங்கள் துரத்திச்சென்றதாகவும்,சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் தாங்கள் திருப்பி தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர் அப்படியானால் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது வழமையாக காவல்துறையினர் தெரிவிக்கும் கதை இந்த கதையில் எந்த காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டிருக்காது,காவல்துறை வாகனங்களிற்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது இவ்வாறான சம்பவம் அதிகாலையில் ஒதுக்குபுறமான இடத்தில் நிகழ்ந்திருக்கும் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலேசிய காவல்துறையினர் பல விடயங்களை தெளிவுபடுத்தவில்லை என ஜனார்த்தனம் விஜயகுமாரின் நண்பர் சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
துரத்தப்படும் காரில் இருப்பவர்களை எப்படி நெஞ்சில் சுட்டுக்கொல்ல முடியும்,என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை நான்காவது நபர் ஒருவரும் காணப்பட்டார் அவர் காலில் காயங்களுடன் காடுகளிற்குள் தப்பிச்சென்றுவிட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர் என குடும்பத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையினர் எனினும் இதனை மறுத்துள்ளனர்.
இதேவேளை காவல்துறையினர் முன்னர் குறிப்பிட்ட நான்காவது நபர் ஜனார்த்தனம் விஜயரட்ணத்தின் மனைவி மோகனாம்பாள் கோவிந்தசாமியா என கேள்வி எழுப்பியுள்ள குடும்பத்தவர்கள் மோகனாம்பாள் சுட்டுகொல்லப்பட்ட மூவருடனும் இரவு உணவு அருந்தியிருந்த பின்னர் காணாமல் போயுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
விஜயரட்ணத்தின் மனைவி மலேசியவை சேர்ந்த பிரித்தானிய பிரஜை எனவும் குடும்பத்தவர்கள் குறிபிட்டுள்ளனர்.
தனது சகோதரி அன்றிரவு தான் பயணம் இடம் குறித்த ஜிபிஎஸ் பதிவினை அனுப்பினார் என தெரிவித்துள்ள மோகனாம்பாளின் சகோதரி வழமைக்கு மாறாக அவர் அதனை அனுப்பியுள்ளார் ஆபத்தில் காணப்பட்டதாலேயே அவர் அவ்வாறு செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளா

கருத்துகள் இல்லை: