திங்கள், 30 செப்டம்பர், 2019

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறானது -அமித் ஷா!

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறானது -அமித் ஷா!zeenews.india.com/ : ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா-வுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்! ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா-வுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்!
புது டெல்லியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அமித்ஷா இதுகுறித்து தெரிவிக்கையில்., பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரத்தை நேரு ஐநாவுக்கு கொண்டு சென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட மிகப் பெரும் தவறு என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை முழு அளவில் விரைவில் செயல்படத் தொடங்கும். காஷ்மீரில் சூஃபி சாதுக்களின் கலாசாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்ட போது மனித உரிமை பேசும் காவலர்கள் எங்கே போனார்கள்? ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப்பட்ட போது அவர்கள் எங்கே போனார்கள்? அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவால் காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் யார் தவறு இழைத்தார்களோ அவர்களே வரலாற்றையும் எழுதினார்கள். அதனால் தான் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வரலாற்றை திருத்தி எழுதுகிற நேரம் தற்போது வந்துவிட்டதாகவும், இப்போதும் கூட 370-வது பிரிவு பற்றியும் காஷ்மீர் குறித்தும் வதந்திகள் கிளப்பிவிடப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் நிலைபாடு குறித்து பேசிய அவர், காஷ்மீரில் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. 370-வது பிரிவு நீக்கப்பட்டதை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஆதரிக்கிறது. அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மிகவும் வளர்ந்த பிராந்தியமாக உருவெடுக்கும். இதற்கு காரணம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி 370-வது பிரிவை நீக்குவது என பிரதமர் மோடி எடுத்த முடிவுதான். காஷ்மீரில் 196 காவல் நிலையங்களில் 8-ல் தான் ஊரடங்கு அமலில் உள்ளது. அதுவும் கூட 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடத்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் 41,800 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ஆனால் யாரும் மனித உரிமைகள் மீறல் என எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் சானத்தின் 370-வது பிரிவு நீக்கமானது இந்தியாவின் ஒற்றுமையை வலிமைப்படுத்தியிருக்கிறது என அமித்ஷா குறிப்பிட்டு பேசினார்

கருத்துகள் இல்லை: