தமிழ் மறவன் :
சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை தாளாமல் தப்பி வந்தவர்களை
"எம் தாய்த் தமிழர்களே! வாருங்கள் என இருகரம் நீட்டி வாரி அணைத்து வரவேற்றவனை, வாட்டமாய் வந்தமர்ந்து..,
"எம் தாய்த் தமிழர்களே! வாருங்கள் என இருகரம் நீட்டி வாரி அணைத்து வரவேற்றவனை, வாட்டமாய் வந்தமர்ந்து..,
" நீ வடுகன், வந்தேறி என பட்டமளித்து பகடி செய்வது நியாயந்தானா?
சீமானை வைத்து தமிழக அரசியலில் குழப்பம் விளைவிப்பதும், திராவிடத்தை ஒழிப்போம் என முழங்குவதும் பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
"நாம் தமிழர்" கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழக அரசியலில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஈழத்தமிழர்களுக்கு வழங்கியவர்கள் யார்?
மலையகத் தமிழர்களைக்கூட தம்மக்களாக கருதாத ஈழத்தவர்கள் எந்த உரிமையில் தமிழக அரசியலில் தலையிடுகிறார்கள்?
தமிழகத்திலிருந்து அயல் தேசங்களுக்கு செல்லும் திராவிட இயக்கத் தலைவர்களை இழிவுபடுத்த முனையும் புலம்பெயர் ஈழத்தவர்களின் செயல் அநீதி இல்லையா?
ஈழத்தமிழர்களின் ஆதரவு நிலை, தமிழக மக்களின் அரசியலை ஆபத்தில் கொண்டு சேர்ப்பதை ஒருக்காலும் ஏற்க இயலாது!
பல ஈழத்தமிழர்கள் போலி இனவாத கூட்டத்திற்கும், இந்துத்வாவிற்கும் பகிரங்கமாய் ஆதரவு நிலை எடுப்பது "உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதற்கு ஒப்பானதே"
ஈழத்தில் யார் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என தமிழக அரசியலாளர்கள் முடிவெடுப்பது எப்படி தவறோ, அதேப்போல தமிழகத்தில் யார் எப்படி அரசியல் செய்ய வேண்டுமென ஈழத்தமிழர்கள் முடிவெடுப்பதும் தவறுதான்!
இதே சூழல் தொடர்ந்தால், தமிழக அரசியலாளர்களின் தார்மீக ஆதரவை ஈழத்தமிழர்கள் இழக்கும் நிலை உருவாகும் என்பதே உண்மை!
- மு.தமிழ் மறவன். கொள்கை பரப்புச் செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக