வெள்ளி, 27 செப்டம்பர், 2019

டொரோண்டோ தமிழ் இளைஞர் சாரங்கள் சுட்டு கொலை .. சரண்குமார் கைது

625.0.560.350.160.300.053.800.668.160.90 கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் பலியான இலங்கை இளைஞர்: கொலையாளி சிக்கினார்! கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் பலியான இலங்கை இளைஞர்: கொலையாளி சிக்கினார்! 625 வீரகேசரி : கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் பலியான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கூடுதல் தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.
கனடாவின் ஸ்கார்பரோவில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றின்போது, வாகனம் ஒன்றிற்குள் ஒரு இளைஞர் குண்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை மீட்க அவசர உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி வெற்றிபெறாமல், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது பெயர் சாரங்கன் சந்திரகாந்தன் என்பதாக தெரியவந்துள்ள நிலையில், பொலிசார் அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சாரங்கன் சந்திரகாந்தன் உயிரிழந்த அதே இடத்தில், மற்றொரு நபரும் குண்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் மோசமாக காயமடைந்திருந்தாலும் அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக Whitchurch-Stouffvilleயைச் சேர்ந்த சரண்ராஜ் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது கொலை, மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவகுமார் நேற்று ஸ்கார்பரோ நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.


 CBC.COM :  A 22-year-old Stouffville man is facing charges, including second-degree murder, after two men were shot in a Scarborough parking lot late last week.
Police were called for a shooting at 3411 McNicoll Avenue, near Middlefield Road, shortly before 10 p.m. on Sept. 19.
Emergency crews found a male victim in a vehicle suffering from at least two gunshot wounds, Toronto police Insp. Jim Gotell told reporters at the scene.
The victim's injuries were "very severe," Gotell said, and he was pronounced dead.
Friends and family identified the victim as 25-year-old Charankan Chandrakanthan, who worked at a nearby printing shop.
Police said a second man was shot during the same incident. He was treated for serious, but non-life-threatening injuries, according to a news release issued Monday evening.
According to the release, police arrested the Stouffville man on Sunday. He is charged with second-degree murder and attempted murder.
He appeared in court Monday morning.
Anyone with information is asked to call the Toronto police homicide squad or Crime Stoppers.

Friends described Charankan Chandrakanthan as a 'kind, honest, loyal' person. (Submitted)

கருத்துகள் இல்லை: