விகடன்: நித்தியானந்தாவிடமிருந்து லிங்கத்தை மீட்டுக் கொடுங்கள்!- போலீஸுக்கு சென்ற புகார்">நித்தியானந்தாவிடமிருந்து லிங்கத்தை மீட்டுக் கொடுங்கள்!- போலீஸுக்கு சென்ற புகார்
>வீ கே.ரமேஷ் - க .தனசேகரன் :
மேட்டூர் அணையில் உள்ள
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த லிங்கத்தை நித்தியானந்தாவிடமிருந்து
மீட்டுத் தரக் கோரி, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாதவர், நித்தியானந்தா. கடந்த 18-ம்
தேதி, பிடதி ஆசிரமத்தில் இருந்துகொண்டு யூடியூப் மூலமாக, ”மேட்டூர்
அணையில் தண்ணீர் வடிந்தால் ஒரு கோயில் தெரியும். அந்தக் கோயிலை நான்தான்
போன ஜென்மத்தில் கட்டினேன். அந்தக் கோயிலின் மூல லிங்கம்கூட என்னிடம்தான்
இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். அது, சமூக வலைதளங்களில் வைரலாகப்
பரவியது. அதையடுத்து, அந்தக் கோயிலுக்குச் சொந்தமான கிராமத்தைச்
சேர்ந்தவர்கள், கொளத்தூர் காவல் நிலையத்தில் நித்தியானந்தா மீது புகார்
கொடுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
இதுபற்றி வேலுசாமியிடம் கேட்டதற்கு, ”மேட்டூர் அணைக்குள் மூழ்கி
இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், பாலவாடி கிராம மக்களுக்குச் சொந்தமானது.
இந்தக் கோயிலை 100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் கட்டினார்கள்.
இந்தக் கோயிலில், விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள், நகைகள், கற்சிலைகள்
எனப் பல பொருள்கள் இருந்தன. அந்தக் காலத்தில் மன்னர்களும், அமைச்சர்களும்
எங்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டூர் அணை கட்டியதால், பாலவாடி கிராமம்
தண்ணீருக்குள் மூழ்கும் நிலை உருவானது. அதையடுத்து, அக்கிராமத்தை விட்டு
வெளியேறி மாதேஸ்வரமலை செல்லும் சாலையில் புதிய பாலவாடி கிராமத்தை
உருவாக்கி, அங்கு ஜலகண்டேஸ்வரர் கோயிலையும் கட்டியிருக்கிறோம். தண்ணீரில்
மூழ்கிய கோயிலுக்குள் இருந்த சிலைகளில், சிலவற்றை மட்டுமே எடுத்து வந்தோம்.
பல சிலைகள் அந்தக் கோயிலுக்குள் இருந்தன. அதில் மூல லிங்கமும், ஐம்பொன்
சிலைகளும் காணாமல் போய்விட்டன. இருந்தபோதும், இன்னும் கோடிக்கணக்கான
மதிப்புடைய சிலைகள், தண்ணீரில் மூழ்கியிருக்கும் கோயிலுக்குள்ளேயே
இருக்கின்றன. இக்கோயில், அறங்காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.
தற்போது, எங்கள் கோயிலின் மூல லிங்கம் நித்தியானந்தாவிடம் இருப்பதாக அவரே
ஒப்புக்கொள்வதால், அந்த மூல லிங்கத்தை மீட்டு, எங்கள் கிராம மக்களிடம்
கொடுக்க வேண்டும்” என்றார்.
இதுபற்றி புதிய பாலவாடி கிராமத்தைச் சேர்ந்த சத்திவேல், ”எங்கள் பாலவாடி
கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்களே ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டினார்கள்.
நித்தியானந்தா பூர்வ ஜென்மத்தில் கட்டியதாகச் சொல்லுவது சுத்தப் பொய்.
எங்கள் கோயிலில் உள்ள மூல லிங்கம் ஜலத்திலேயே இருப்பதால், இது
ஜலகண்டேஸ்வரர் என்று கூறப்படுகிறது. அந்த மூல லிங்கத்திற்கு மிகுந்த சக்தி
உண்டு.
எங்கள் கோயிலில்தான் சிவனும் பெருமாளும் ஒன்றாக இருக்கிறார்கள். விநாயகர், தன் இரண்டு மனைவிகளான சித்தி, புத்தியோடு இருப்பார். எங்கள் கோயிலுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அந்த லிங்கத்தைப் பல வருடங்களாகக் காணவில்லை. எங்க முன்னோர்கள் லிங்கத்தைக் காணவில்லை என்று மிகவும் வேதனைப்பட்டனர். இந்நிலையில், நித்தியானந்தாவே தன்னிடம் இந்த லிங்கம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது. எங்கள் கிராமத்திற்குச் சொந்தமான மூல லிங்கத்தை நித்தியானந்தாவிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
vikatan.com
எங்கள் கோயிலில்தான் சிவனும் பெருமாளும் ஒன்றாக இருக்கிறார்கள். விநாயகர், தன் இரண்டு மனைவிகளான சித்தி, புத்தியோடு இருப்பார். எங்கள் கோயிலுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அந்த லிங்கத்தைப் பல வருடங்களாகக் காணவில்லை. எங்க முன்னோர்கள் லிங்கத்தைக் காணவில்லை என்று மிகவும் வேதனைப்பட்டனர். இந்நிலையில், நித்தியானந்தாவே தன்னிடம் இந்த லிங்கம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது. எங்கள் கிராமத்திற்குச் சொந்தமான மூல லிங்கத்தை நித்தியானந்தாவிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக