திங்கள், 23 செப்டம்பர், 2019

காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திமுக ...வீடியோ .. அகில இந்திய தலைமையை ஏற்க தயாராகிறது?


காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திமுக ஆரம்பிக்கும் முயற்சி செயல் முறைப்படுத்தப்பட்டால் அது ஒரு Master Stroke என்று வரலாறு கூறும்!
இதற்குரிய தார்மீக உரிமை Moral High Ground திமுகவுக்கு உண்டு!
இந்திய பெரு நிலப்பரப்பின் மண்ணின் மைந்தர்கள் பெரும்பாலும் திராவிடர்களே ..
முன்பொருமுறை காங்கிரசின் பழம்பெரும் தலைவர் பாபு ஜெகஜீவன் ராம் கூறியிருக்கிறார் . அவர் மட்டுமல்ல ஏராளமான அகில இந்திய தலைவர்கள் இந்த கருத்தை கூறியிருக்கிறார்கள்.
பார்ப்பனர்களும் பனியாக்களும் அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே இந்த கருத்தை ஏற்று கொள்ள மறுப்பார்கள். அவர்கள் தங்களின் ஆதிக்க சுரண்டலுக்கு இந்த கோட்பாடு தடைஎன்பதை அறிவார்கள்.
அவர்களின் அதி உச்ச பட்ச கொள்ளைதான் தற்போது நடைபெறுகிறது.
இந்திய தேசிய கட்சிகள் பெரும்பாலும் மண்ணின் மக்களை சுரண்டும் ஆதிக்கவாதிகளின் நிகழ்ச்சி நிரலைத்தான் இதுவரை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
இன்றைய காஷ்மீராகட்டும் இதர மேற்குவங்கம் அஸ்ஸாம் போன்ற மாநில மக்களின் அடிப்படை அடையாளங்களை இல்லாதொழிக்கும் அடவடியை ஆர் எஸ் எஸ் பாசிச சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்திய தேசிய அளவில் சரியான ஒரு எதிர்க்கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை திமுகவே தற்போது வெளிக்காட்டி உள்ளது.
இது ஒரு வரலாற்று தேவை.


இந்திரா அம்மையாரின் எமெர்ஜென்சி பாசிசத்தை எதிர்த்து களம் அமைத்து அதை உடைத்ததில் திமுகவின் பங்கு எத்தகையது என்பது வரலாறு!
மாநிலங்களின் கல்வி பொருளாதாரம் சமுக நீதி மாநில உரிமை போன்ற விடயங்களில் இன்று அகில இந்திய அளவில் திமுகதான் இன்று ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டி!
இந்தியா இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையை எதிர்பார்க்கிறது!
அதை அவர்களும் புரிந்து கொண்டிருக்கிறாகள் என்பது மட்டுமல்ல அதற்கு தயாராகியும் விட்டார்கள் என்றே கருதுகிறேன்!

கருத்துகள் இல்லை: