திங்கள், 23 செப்டம்பர், 2019

திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா-மன்மோகன் சிங் சந்திப்பு


தந்தையை சந்திப்பதற்காக சிறைக்கு வந்த கார்த்தி சிதம்பரம்திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா-மன்மோகன் சிங் சந்திப்பு  மாலைமலர் : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர். புதுடெல்லி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. மேலும், ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் சிறைச்சலையில் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். அப்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: