வியாழன், 26 செப்டம்பர், 2019

கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி வன்புணர்வு ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் கைது

கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைதுநக்கீரன் :சேலம் அருகே கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வருபவர் மோகன்ராஜ். ஆட்டோ டிரைவர். இவர் அந்த பகுதியில் ஒரு கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
மோகன்ராஜ் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அந்த பெண் இவரது பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் அந்த பெண்ணும் இவரது வக்கிர காமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் காகாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ஆட்டோவில் சென்ற ஒரு பெண் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்து வற்புறுத்துவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். அரசியல் பின்புலத்துடன் சுற்றி வந்த மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது அவரது செல்போனை பிடுங்கி போலீசார் சோதனை செய்தபோது அதில் 7 பெண்களை மிரட்டியும், தாக்கியும் பலவந்தமாக மோகன்ராஜ் அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ அவரது செல்போனில் இருந்ததையும் போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:-

கோவை, ஈரோடு, பவானி மற்றும் சேலத்தில் இருந்து நள்ளிரவில் காகாபாளையம், இளம்பிள்ளை செல்வதற்கு போதிய பஸ் வசதி கிடையாது. இதனால் காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஆட்டோக்களிலேயே பயணிகள் வீடுகளுக்கு திரும்புவார்கள். அப்படி மோகன்ராஜ் ஆட்டோவில் வரும் பெண்களிடம் நைசாக பேச்சு கொடுப்பார். அப்போது அவர்களது குடும்ப சூழ்நிலையை அறிந்துகொள்வார். பின்னர் அவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் பணம் தருவதாக கூறி நீண்ட நேரம் போனில் பேசுவார்.

அப்போது இனிக்க இனிக்க பேசி அவர்களை மயக்குவார். அவரது பேச்சில் மயங்கும் பெண்களை தனியாக தனது வீட்டிற்கு அழைத்து செல்வார். பின்னர் பலவந்தமாக அவர்களை மிரட்டி உல்லாசமாக இருப்பார். அப்போது அவர்களிடம் மிகக் கொடூரமாகவும் வக்கிரமாகவும் ஈடுபடுவார்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவி உள்பட 7 பேரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்ததும் ஏற்கனவே அதை அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் பதிவு செய்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டும் அவர் கூப்பிடும் நேரம் எல்லாம் உல்லாசத்திற்கு வரவேண்டும் என்றும் வராவிட்டால் சமூக வலைதளங்களில் உங்களது ஆபாச படத்தை வெளிவிடுவதாகவும் மிரட்டி மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

இந்த வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பல பெண்களை மிரட்டியும், ஆவேசமாக பேசியும் உல்லாசம் அனுபவிப்பதும் கண்கூடாக தெரிகிறது. மேலும் இதேபோல பல பெண்களை அரசியல் செல்வாக்கால் மோகன்ராஜ் வேட்டையாடியதும் தெரிய வந்தது.

மொத்தத்தில் மோகன் ராஜ் 40-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் அதில் பலர் மோகன்ராஜுக்கு பயந்து ஊரைவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சில பெண்களை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கியதும் பின்னர் அவர்களை விபச்சாரத்தில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஒரு பெண் மோகன்ராஜியின் தொல்லை தாங்க முடியாமல் திடீரென மாயமாகிவிட்டார். அவர் தற்போது எங்கு உள்ளார்? என்பதே மர்மமாக உள்ளது. அவரது குடும்பத்தினரும் வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினால் அவரின் காம சேட்டைகள் முழுவதும் தெரியவரும் என்பதால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

காகாபாளையம் ஆட்டோ நிறுத்தத்தில் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வந்தன. இதில் பெரும்பாலான ஆட்டோக்களுக்கு ஆர்.சி. புக் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டதால் அந்த ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்த அவரது நண்பர் உள்பட 10 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

இதேபோல ஆட்டோவில் அழைத்து சென்று பயணிகளை கற்பழித்து ஆபாச படம் எடுத்த அவரது நண்பர் ஒருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். அவரை பிடித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

பலாத்கார புகாரில் சிக்கிய மோகன்ராஜ் தொடர் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: