ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

முஸ்லிம் - சீக்கியர் நல்லெண்ண அடையாளமாக மீட்கப்படும் பாகிஸ்தான் குருத்துவாரா

இந்தியா பாக்கிஸ்த்தான் பிரிவினையின் போது சீக்கிய பஞ்சாப் மாகாணம்  இந்திய பகுதிக்கும் .. இஸ்லாமிய  பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தான் பகுதிக்குமாக பிரிக்கப்பட்டது. 
மொழியாலும்  இதர பண்பாட்டு கலாசார ரீதியிலும் இவர்களுக்குள் ஆழமான ஒற்றுமை  பிணைப்பு இருக்கிறது . 
காலிஸ்தான் போராட்டத்தின் போது இதை உணரகூடியதாக இருந்தது ...  எதிர்காலத்தில் இருபகுதி பஞ்சாபியர்களும் தங்களுக்குள் ஒரு வலுவான தொடர்பு பொறி அமைப்பை உருவாக்க கூடிய சாத்தியம்  இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை!
BBC : பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணத்தில் சீக்கிய மதம் நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் பிறந்த மற்றும் இறந்த இடங்கள் இங்குதான் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, தங்களின் வழிபாட்டுத் தலங்களான குருத்துவாராக்களையும், புனிதத் தலங்களையும் கைவிட்டு விட்டு சீக்கியர்கள் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
 பல ஆண்டுகால புறக்கணிப்புக்குப் பிறகு இந்த இடங்களை புலம்பெயர்ந்த சீக்கியர்களின் உதவியோடு, புனரமைக்க பாகிஸ்தான் அரசு முனைப்பு காட்டுகிறது.
பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஃஜாப்ரி அவ்வாறு மீட்கப்பட்டுவரும் நவ்ஷிரான் விர்கானிலுள்ள குருத்துவாராவை பார்வையிட்டுள்ளார். சீக்கியர்களுக்கு இது மிகவும் முக்கியமான வழிபாட்டு தலமாகும்.

கருத்துகள் இல்லை: