விகடன் : தாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்... சினிமாவை மிஞ்சும் 39 வருட பாசப்போராட்டம்!
தற்போது 41 வயதாகும் இவர், டென்மார்க்கிலிருந்து அவரின் உண்மையான பெற்றோரைத் தேடித் தமிழகம் வந்துள்ளார். அவரைச் சந்தித்தோம்.
“டென்மார்க்கில் வளர்ந்தாலும், எனது நிறத்திலும் உருவத்திலும் வேறுபாடு இருந்தது. எனது வளர்ப்புப் பெற்றோர் என்னை மிக நல்ல முறையில், தத்து எடுத்த உண்மையைச் சொல்லியே வளர்த்தார்கள். தற்போது படிப்பை முடித்து, டென்மார்க்கில் உள்ள பங்குச்சந்தை நிறுவனத்தில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். இடையிடையே என் அம்மா மற்றும் குடும்பத்தாரை பார்க்க ஆசையாக இருந்தது. எனக்குத் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். பிள்ளைகள் வளர வளர, எனக்கு என் தாயின் ஏக்கம் அதிகமானது. அதையடுத்து எனது விருப்பத்தை, வளர்ப்புப் பெற்றோரிடம் கூறி, அவர்களின் சம்மதத்தின்பேரில் கடந்த 2013-ல் சென்னை வந்து உண்மையான பெற்றோர்களைத் தேடி அலைந்தேன். ஒரு மாதகாலம் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விரக்தியுடன் திரும்பிச் சென்றுவிட்டேன்.
தொடர்ந்து வழக்கறிஞரான அஞ்சலி பவார், "சாந்தகுமார், அவரின் பெற்றோரை கடந்த சில வருடங்களாகத் தேடிவருகிறார். அவருக்கு உதவியாக நாங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். 39 வருடங்களுக்கு முன்பு பிரிந்த அவரின் பெற்றோரைக் காண மிகுந்த ஆவலில் உள்ள அவர், டென்மார்க்கிலிருந்து தனியாக வந்துள்ளார். தொடர்ந்து அவருடன் பெற்றோரைத் தேட ஆரம்பித்துள்ளோம். வரும் 29-ம் தேதி மதியம்வரை சாந்தகுமார் தமிழகத்தில் இருப்பார். அதற்குள் அவர் அம்மாவைக் கண்டுபிடித்துவிட வேண்டும்” என்றார் நம்பிக்கையுடன்.
தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் அம்மாவையும் குடும்பத்தாரையும் தேடி அலைந்துகொண்டிருக்கிறார் சாந்தகுமார்.
தாயைப் பார்க்க தவிக்கும் மகனின் ஏக்கம் நிறைவேறட்டும்
சி.ய.ஆனந்தகுமார் என்.ஜி.மணிகண்டன் - "வறுமையின்
காரணமாகப் பெற்றோர், குழந்தையாக இருந்த என்னை தத்து கொடுத்திட்டாங்க. நான்
வளர்ந்தது டென்மார்க்கில், நல்லவேலை, கைநிறைய சம்பளம். ஆனால், எனது
உண்மையான பெற்றோரை பார்க்க முடியலையே!” - பெற்ற தாயின் முகத்தைப் பார்க்க
தஞ்சை வீதிகளில் அலைகிறார் டேவிட் சாந்தகுமார்.
தஞ்சாவூர்
மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி
மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்த
இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக்
கொடுத்துவிடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு
நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக்
கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல்
நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார். தற்போது 41 வயதாகும் இவர், டென்மார்க்கிலிருந்து அவரின் உண்மையான பெற்றோரைத் தேடித் தமிழகம் வந்துள்ளார். அவரைச் சந்தித்தோம்.
“டென்மார்க்கில் வளர்ந்தாலும், எனது நிறத்திலும் உருவத்திலும் வேறுபாடு இருந்தது. எனது வளர்ப்புப் பெற்றோர் என்னை மிக நல்ல முறையில், தத்து எடுத்த உண்மையைச் சொல்லியே வளர்த்தார்கள். தற்போது படிப்பை முடித்து, டென்மார்க்கில் உள்ள பங்குச்சந்தை நிறுவனத்தில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். இடையிடையே என் அம்மா மற்றும் குடும்பத்தாரை பார்க்க ஆசையாக இருந்தது. எனக்குத் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். பிள்ளைகள் வளர வளர, எனக்கு என் தாயின் ஏக்கம் அதிகமானது. அதையடுத்து எனது விருப்பத்தை, வளர்ப்புப் பெற்றோரிடம் கூறி, அவர்களின் சம்மதத்தின்பேரில் கடந்த 2013-ல் சென்னை வந்து உண்மையான பெற்றோர்களைத் தேடி அலைந்தேன். ஒரு மாதகாலம் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விரக்தியுடன் திரும்பிச் சென்றுவிட்டேன்.
2017-ம்
ஆண்டு இந்தியாவிலிருந்து டென்மார்க் நாட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக
வந்திருந்த அருண் டோஹ்லி என்பவரை சந்தித்தேன். அவர் புனேவில் குழந்தைகள்
பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறினார். அவரிடம்
எனது விவகாரத்தைக்கூறி, அம்மாவை பார்க்கவும், கண்டுபிடித்துத் தரவும்
கோரிக்கை வைத்தேன்.
அதனடிப்படையில்
அருண் மற்றும் அவரது வழக்கறிஞர் அஞ்சலி பவார் ஆகியோர், தொடர்ந்து முயற்சி
செய்ததன் பலனாக, என்னை சிறு வயதில் தத்துக் கொடுக்க உதவிய சென்னை
பாதிரியார் ஜார்ஜ் என்பவரின் உறவினர்கள் மூலமாக 40 வருடங்களுக்கு முன்பாக
எடுக்கப்பட்ட என் அம்மா மற்றும் குடும்பத்தினர் புகைப்படமும் எனது
பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன. மேலும் ஓர் அதிர்ச்சியாக என் அண்ணனும்
தத்துக் கொடுக்கப்பட்ட விவரமும் அப்போதுதான் தெரியவந்தது. எனது இயற்பெயர்
டேவிட் சாந்தகுமார் என்பதும், என் அண்ணன் பெயர் மார்டீன் என்கிற
டேனியல்ராஜன் என்பதையும் தெரிந்து கொண்ட நான் அதன்பிறகு டென்மார்க்
திரும்பி என் அண்ணனைத் தேடி அலைந்தேன். ஆனால், அவர் வேறு பகுதியில் உள்ள
தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் டென்மார்க்கில்தான்
இருக்கிறார் என்பதால் எப்படியேனும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கை
உள்ளது. அதற்கு முன் என் அம்மாவைச் சந்திக்க வேண்டும்.
பிறப்புச்
சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்தமுறை சென்னை வந்தேன். பிறப்புச்
சான்றிதழில் எனது பெற்றோர் தண்டையார்பேட்டை, பட்சம்மாள் தெருவில் வசிப்பதாக
இருக்க அங்கு தேடிப்போனோம். அங்கும் அவர்கள் இல்லை. அங்கிருந்து என்
பெற்றோர் பெரம்பூர் மற்றும் திருவொற்றியூர் பகுதியில் குடியேறியதாகத் தகவல்
கிடக்க அங்கும் தேடினோம். ஆனால், அங்கிருந்தவர்கள் என் அம்மா மற்றும்
அப்பா பெயரில் இருந்த வேறு நபர்கள். உண்மையான பெற்றோரைப் பார்க்க
முடியவில்லை. ஒருவழியாக என் பெற்றோரின் பூர்வீகம் தஞ்சாவூர் என்பது
தெரியவந்தது. இந்நிலையில் அவர்களைத் தேடி டென்மார்க்கில் இருந்து
செப்டம்பர் 24-ம் தேதி வந்தேன். நேற்று முன்தினம் முழுவதும் அம்மாவைத் தேடி
அலைந்தேன்.
எதுவுமே இல்லாமல், டென்மார்க்கில் இருந்து வந்த என்னிடம் இப்போது நிறைய புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதைவைத்து சொல்கிறேன்... இம்முறை நிச்சயம் அம்மாவைப் பார்த்து விடுவேன்!டேவிட் சாந்தகுமார்
எனது
உடல்நிலையில் மாற்றம் இருந்தாலும்கூட, என் முகத்தைப் பார்த்ததும் என்
பெற்றோர் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. என் தாயின்
புகைப்படங்கள் உள்ளதால், நானும் என் அம்மாவை சுலபமாக அடையாளம் காண
முடியும். எதுவுமே இல்லாமல், டென்மார்க்கில் இருந்து வந்த எனக்கு, இத்தனை
நாள் தேடலில், குடும்பத்தினரின் நிறைய புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதை
வைத்துக்கொண்டு தேடி அலைகிறேன். இம்முறை நிச்சயம் அம்மாவை பார்த்துவிடுவேன்
என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞரான அஞ்சலி பவார், "சாந்தகுமார், அவரின் பெற்றோரை கடந்த சில வருடங்களாகத் தேடிவருகிறார். அவருக்கு உதவியாக நாங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். 39 வருடங்களுக்கு முன்பு பிரிந்த அவரின் பெற்றோரைக் காண மிகுந்த ஆவலில் உள்ள அவர், டென்மார்க்கிலிருந்து தனியாக வந்துள்ளார். தொடர்ந்து அவருடன் பெற்றோரைத் தேட ஆரம்பித்துள்ளோம். வரும் 29-ம் தேதி மதியம்வரை சாந்தகுமார் தமிழகத்தில் இருப்பார். அதற்குள் அவர் அம்மாவைக் கண்டுபிடித்துவிட வேண்டும்” என்றார் நம்பிக்கையுடன்.
தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் அம்மாவையும் குடும்பத்தாரையும் தேடி அலைந்துகொண்டிருக்கிறார் சாந்தகுமார்.
தாயைப் பார்க்க தவிக்கும் மகனின் ஏக்கம் நிறைவேறட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக