விகடன் - சத்யா கோபாலன்:
சவுதி எண்ணெய் ஆலைத் தாக்குதலுக்குப் பின்னால் யார் யார் உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது சவுதி அரேபியா.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் உள்ளது
அப்கைக் என்னும் இடம். இங்குள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு
நிலையம் மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த செப்டம்பர் 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்தது. அப்கைக்
சுத்திகரிப்பு ஆலையில் நாளொன்றுக்கு 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்
உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தாக்குதல் காரணமாக நாளொன்றுக்கு 57
லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, சவுதி எரிசக்தித்துறை
தெரிவித்தது.
`இந்தத் தாக்குதலுக்கு இரான்தான் காரணம்’ என ஆதாரங்களுடன்
வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது சவுதி பாதுகாப்புத் துறை. மேலும், சவுதி
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கிய ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின்
பாகங்கள் நேற்று காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது பேசிய சவுதி
பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் அல்-மால்கி (al-Malki), “ இரானிய
டெல்டா விங்கான 25 ட்ரோன்கள் மற்றும் `யா அலி’ கப்பல் ஏவுகணைகள் போன்றவை
சவுதியின் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதலை ஏற்படுத்தி உள்ளன.தெற்குப் பகுதியில் உள்ள ஏமனிலிருந்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை. அதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். கப்பல் ஏவுகணையின் துல்லியமான தாக்குதலை ஆராய்ந்ததில் அது இரானின் திறனைத் தாண்டி மேம்பட்டதாக உள்ளது. இவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும்படி ஏவப்பட்டுள்ளது” என மால்கி கூறியுள்ளார்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக