வியாழன், 26 செப்டம்பர், 2019

சவூதி இளவரசர் சல்மான் : ஜமாலைக் கொன்றது நாங்கதான்!' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi

bin Salman Khashoggi - bin Salman vikatan.com : `பத்திரிகையாளர் கஷோகி கொலையில் எனது பங்கு என்ன?' - முதல்முறையாக மௌனம் கலைத்த சவுதி இளவரசர் சல்மான் `பத்திரிகையாளர் கஷோகி கொலை, தான் பொறுப்பில் இருக்கும்போது நடந்தது; அதற்கு தாமே முழு பொறுப்பு' சவுதி இளவரசர் சல்மான் கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. இதை அமெரிக்காவும் உறுதிசெய்தது. அதிலிருந்து, துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவியது.
தங்கள் நாட்டில் நடைபெற்ற கொலையைக் கண்டுபிடித்து, சவுதியின் சதியை வெளியில் கொண்டுவருவோம் என துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜமால் கொலையில் உள்ள பல மர்மமான விஷயங்களை துருக்கி அரசும், அந்நாட்டு ஊடகங்களும் கண்டுபிடித்து, தொடர்ந்து வெளியிடத் தொடங்கினர். ஜமால் கொலை செய்யப்பட்டு, அவரின் விரல் சவுதி மன்னருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது என்றும், ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டது.

பின்னர், சவுதி தூதர் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டன போன்ற பல்வேறு தகவல்களை வெளியிட்டது துருக்கி. மேலும், துருக்கில் உள்ள சவுதி தூதரகத்தில்தான் கஷோகி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி, அவரது கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் தான் காரணம் என தன் தரப்பு வாதங்களை துருக்கி பதிவு செய்தது. ஆனால், துருக்கியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சவுதி தொடர்ந்து நிராகரித்துவந்தது.


சமீபத்தில், ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது. இந்நிலையில், ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டு, அடுத்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அமெரிக்காவின் ஃபிரன்ட்லைன் ஊடகத்தைச் சேர்ந்த மான்ட்டின் ஸ்மித் என்பவர், `The Crown Prince of Saudi Arabia' என்ற பெயரில் ஆவணப் படத்தை எடுத்துள்ளார். இதில், சவுதி இளவரசர் சல்மானின் வளர்ச்சி, கஷோகி கொலை என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்திருக்கிறது.


இந்தப் படம், வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தற்போது, ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. வீடியோ தொடங்கும்போதே, `சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், ஜமால் கஷோகி மரணத்தில் தன் பங்கு என்ன என்பதை முதல் முறையாகத் தெரிவித்துள்ளார்’ என எழுத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018 டிசம்பர் மாதம், ரியாத்தில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்ள வந்த பின், சல்மானை மார்ட்டின் சந்தித்துப் பேசினார் என அடுத்த வரிகள் நகர்கின்றன.

தொடர்ந்து, கார் ரேஸ் நடக்கும் இடங்கள் காட்டப்படுகின்றன. அதற்குப் பின்னால் மார்ட்டினின் குரல் மட்டும் ஒலிக்கிறது. ``நான் இளவரசர் பின் சல்மானிடம் பேசினேன். கஷோகி மரணத்தில், தன் பங்கு பற்றி அவர் முதல்முறையாகப் பேசினார். அவர் என்னிடம், ``அந்தச் சம்பவங்கள் அனைத்தும் நான் பொறுப்பில் இருக்கும்போதுதான் நடந்தன. அதற்கான அனைத்து பொறுப்புகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

ஆனால், கொலை தனக்குத் தெரியாமல் நடந்தது என்று சல்மான் கூறியதாக மார்டின் சொல்கிறார். உடனே, `நீங்கள் பொறுப்பில் இருக்கும்போது உங்களுக்குத் தெரியாமல் எப்படி கொலை நடந்திருக்க முடியும்?' என மார்ட்டின் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு சல்மான்,``எங்கள் நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களில் 3 மில்லியன் பேர் அரசு ஊழியர்கள்” என்று பதிலளித்ததாக ஃப்ரண்ட்லைன் வீடியோ சொல்கிறது. கொலையாளிகள், அரசின் தனிப்பட்ட ஜெட்டில் பயணித்துள்ளனர் என்ற தனது கேள்விக்கு, ``அந்த ஜெட்டுகளைக் கண்காணிப்பதற்காக அதிகாரிகள், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெட்டுகளுக்கு அவர்களே பொறுப்பு. அதை எடுத்துச் செல்ல அவர்களுக்கு அதிகாரம் உள்ளது” என சல்மான் முடிக்கிறார்.

இவ்வாறு மிகவும் அமைதியாக வீடியோவும் முடிகிறது. சவுதி இளவரசர் சல்மானின் ஆதரவாளராக இருந்த கஷோகி, பின்னர் அவரின் செயல்பாடுகளை விமர்சிப்பவராக மாறினார். அக்டோபர் ஒன்றாம் தேதி ஒளிபரப்பப்பட இருக்கும் ஆவணப் படத்தில் ப்ரண்ட்லைன் ஊடகத்துக்கு கஷோகி அளித்த வீடியோ பேட்டியும் வெளியிடப்படுகிறது.

இது, கஷோகி பற்றிய ஆவணப் படத்தின் முன்னோட்டம் என்பதால், அனைத்து கேள்வி-பதில்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. மொத்த படமும் வெளியான பிறகுதான் கஷோகி பற்றி சல்மான் உண்மையில் என்ன பேசினார் என்பது தெரியவரும். இருந்தும் தற்போது, `எனது கண்காணிப்பின் கீழ்தான் நடந்தது’ என சல்மான் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள வரிகள் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.



இதையும் வாசிங்க :"`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்!' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi" class="qt-image" src="https://images.assettype.com/vikatan%2F2019-05%2F8628822a-fc06-4e26-a507-f2dfc747870b%2F140197_thumb.jpg?w=480&auto=format%2Ccompress" />


`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்!' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi
பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தினுள்தான் கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக சவுதி அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. 
ஜமால் கஷோகிஜி யார்... அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்யவும்...`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking 

கடந்த அக்டோபர் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தினுள் சென்ற ஜமால் கஷோகி திரும்ப வெளியே வரவேயில்லை. துருக்கி அரசு ஜமால் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தது. கொலையில் சம்பந்தப்பட்ட 15 சவுதி பிரஜைகளின் பெயர்களையும் பட்டியலிட்டது. சவுதி அரசு இதை மறுத்தது. `சவுதி தூதரகத்துக்குள் வந்த ஜமால் வெளியே சென்றுவிட்டார். அவர் எப்படி மாயமானார் என்பது தெரியாது’ என்று சவுதி தூதரக அதிகாரிகள் தீர்க்கமாக கூறிவிட்டனர். 
சவுதியைச் சேர்ந்த ஜமால் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தில் ட்ரம்ப் அரசும் தலையிட்டு சவுதிக்கு நெருக்கடியைக் கொடுத்தது. பின்னர் ட்ரம்ப், சவுதியுடன் சமரசம் செய்துகொண்டது தனிக்கதை. ஜமால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைத் துருவித் துருவி புலனாய்வு செய்துகொண்டிருந்த துருக்கி அரசு, சவுதி அரசுக்குத் தலைவலியாக இருந்தது. சவுதி தூதரக அதிகாரிகளால் ஜமால் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதன் ஆடியோ ஆதாரங்களையும் துருக்கி ஊடகங்கள் வெளியிட்டன. ஜமால் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடக நிறுவனத்தின் பத்திரிகையாளர் என்பதால், அமெரிக்க பத்திரிகைகள் அவரின் கொலை விவகாரத்தை உலகளவில் கொண்டு சேர்த்தன. துருக்கி ஊடகங்களும் சவுதி அரசை தோலுரித்துக் காட்டியது. # JusticeForJamal என்னும் ஹேஷ் டாக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. நெருக்கடி மேல் நெருக்கடியைக் சந்தித்த சவுதி அரசு தற்போது சரண்டர் ஆகிவிட்டது.

சவுதி தூதரகத்தினுள் வந்த ஜமால் வெளியே சென்றுவிட்டதாக கூறிவந்த சவுதி அரசு தற்போது அவர் தூதரக அலுவலகத்தினுள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டுவிட்டது. சவுதி அரசின் சார்பாக வெளியான அதிகாரபூர்வ அறிக்கையைப் பார்ப்பதற்கு முன்பு துருக்கி துப்பு துலக்கி வெளியிட்ட விவரங்களைப் பார்ப்போம்..

* சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததன் முக்கிய காரணம், சவுதியில் அவருக்கு வந்த மிரட்டல்கள்தான். சவுதி அரச குடும்பத்துக்குள் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரானவர்களுடன் ஜமால் நெருக்கமாக இருந்திருக்கிறார். எனவே, அவருக்கு இளவரசர் தரப்பில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. அதாவது சவுதி அரசக் குடும்பத்தினருக்குள் நடக்கும் அதிகார மோதலில் இவர் பலிகடா ஆகிவிட்டார்.

* அக்டோபர் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு ஜமால் சென்றார். சவுதியைச் சேர்ந்த சிலர் அங்கு வைத்து அவரைக் கொலை செய்ய முன்னரே திட்டம்தீட்டிவிட்டனர். 
* திட்டமிட்டபடி சவுதியில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் 15 பேர் அக்டோபர் 2-ம் தேதி காலை துருக்கியின் சவுதி தூதரகத்துக்கு வந்து சேர்ந்தனர். ஜமாலின் விரல்களை வெட்டி சித்ரவதை செய்து அவரின் தலையைத் துண்டித்து கொலை செய்தனர். அதற்குப் பின்னர் அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். சில மணி நேரங்களில் அந்த 15 பேரும் மீண்டும் ஜெட் விமானம் மூலம் சவுதி சென்றுவிட்டனர். இவை அனைத்தும் துருக்கியில் சவுதி தூதர் முன்னிலையில் நடந்துள்ளது.

 * ஜமால் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த 15 பேரில் 12 பேர் சவுதி பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்கள். அவர்களில் சிலர் சவுதி இளவரசருக்கு நெருக்கமானவர்கள் என்று லோக்கல் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவைதான் துருக்கி அரசு வெளியிட்ட விவரங்கள். கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படத்தில் நடப்பது போன்று கொலைக்கான திட்டமிடல் நடந்துள்ளது.
இனி சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரங்களைப் பார்ப்போம்..

* ஜமால் காணாமல் போன விவகாரம் குறித்து சவுதி அரசு விசாரணைக்கு ஆணையிட்டது. எங்கள் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் ஜமால் சவுதி தூதரக அலுவலகத்தினுள் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று சவுதி தூதரக அதிகாரிகளுக்கும் ஜமாலுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறி இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. கொலையில் சம்பந்தப்பட்ட 18 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஜமால் கொலையில் தொடர்புடைய சவுதி உளவுப்பிரிவு துணைத் தலைவர் அஹ்மத் அல் அசிரி மற்றும் அரசின் ஊடக ஆலோசகர் சவுத் அல்-கஹ்தானி ஆகியோரையும் பணிநீக்கம் செய்துள்ளதாகச் சவுதி அரசு அறிவித்துள்ளது.

 * உயர்மட்ட அதிகாரிகளான இவர்கள் இருவருமே சவுதி மன்னருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்தக் கொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் நேரடி தொடர்பு இருக்கலாம்’ என்பது துருக்கி அரசின் வாதம்.

இதனிடையே சவுதி இளவரசர் சல்மான் துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகனுக்கு தொலைபேசியில் அழைத்து இந்த விவகாரத்தில் இரு நாடுகளுமே ஒத்துழைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்’ என்று பேசியதாக துருக்கி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 “வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாகியதால் சவுதி தூதரக அதிகாரிகள் ஜமாலை கொன்றுவிட்டனர் என்று சவுதி அரசு கூறியுள்ள கதை மிக சிறப்பு. 15 பேர் திட்டமிட்டு துருக்கி வந்திறங்கி, கொலையைக் கச்சிதமாக முடித்துவிட்டுப் பறந்துவிட்டனர். ஆனால், சவுதி அரசோ கதை சொல்கிறது” என்று ஜமாலின் ஊடக நண்பர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: