தினமலர் : தேனி,: ''உதித்சூர்யா போல 'நீட்' தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் 7
மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார்
தெரிவித்தார். ஆள்மாறாட்ட மாணவர்களின்பெயர் விபரங்களை வெளியிடாமல் இருக்க
புரோக்கர் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா 21. தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் கடந்த மாதம் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார். 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 'சீட்' பெற்ற பிரச்னையில்சி.பி.சி.ஐ.டி., போலீசார் உதித்சூர்யாவை குடும்பத்துடன் திருப்பதியில் பிடித்தனர்.பின்னர் தேனிக்கு கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணை முடிவில் உதித்சூர்யா, தந்தை வெங்கடேசனை கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பன்னீர்செல்வம் அக்.,10 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
போலீசார் இருவரையும் தேனி தேக்கம்பட்டி சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் வெங்கடேசன் கோரிக்கையின்படி, முதல் தர அறை இல்லாததால், இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.முன்னதாக வெங்கடேசன், தான் சீறுநீரக பிரச்னைக்கான மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதனால் மதுரை சிறைக்கு மாற்ற போலீசார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. விசாரணைக்குப்பின் உதித்சூர்யா தாய் கயல்விழி, உறவினர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டதாக போலீசார்தெரிவித்தனர்.
சி.பி.சி.ஐ.டி., உயரதிகாரி கூறுகையில், 'டாக்டர் வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும், ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கும் பயிற்சி மையத்திற்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. அம்மையத்திற்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஒருவர் புரோக்கராக செயல்படுகிறார்.
அவரிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டாக்டர் வெங்கடேசன் முதற்கட்டமாக ரூ.10 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியது தெரியவந்துள்ளது. இதுபோல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 7 மாணவர்களின் ஆவண விபரங்களை சேகரித்துள்ளோம். டாக்டர் வெங்கடேசனிடம் தொடர்பு கொண்ட புரோக்கரை ஓரிரு நாட்களில் கைது செய்வோம். பின்னர் அந்த ஏழு மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் விசாரிப்போம்.
டாக்டர் வெங்கடேசனின் நண்பர் மூலம் தொடர்பில் உள்ள புரோக்கர், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களிடம் பெயர் விபரங்களை வெளியிடாமல் இருக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்' என்றனர்.
சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார் கூறியதாவது:கேரளாவில் பயிற்சிமைய புரோக்கர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறு. 'நீட்' தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேலும் 7 மாணவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எளிதில் கண்டறிய முடியாத உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிய சிறப்பு நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப குழுவை நியமித்துள்ளோம். பின்னணியில் மிகப்பெரிய 'நெட்வொர்க்' இருக்கும் என்பதால் அதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளாம்.
தேனி மருத்துவக் கல்லுாரியில் மாணவர்கள் அட்மிஷன் நடந்த போது, கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படாதது, ஓரிரு முக்கிய இடங்களில் கேமரா காட்சிகளை பதிவு செய்யாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. உதித்சூர்யா வருகைப் பதிவேட்டில் குளறுபடியாக மாற்றம் செய்யப்பட்டது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் முதல்வர் ராஜேந்திரனிடம் விசாரணை செய்ய உள்ளோம். அவரை மறு விசாரணைக்கு வரும்படி தகவல் அனுப்பியுள்ளோம். கேரளாவிற்கு எங்கள் குழு சென்றுள்ளனர், என்றார்.
இந்நிலையில் நேற்று காலை கேரளா சென்ற சி.பி.சி.ஐ.டி., போலீசார் திருவனந்தபுரத்தில் ஜார்ஜ் என்பவரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் டாக்டர் வெங்கடேசன் சார்பில் தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவருக்கும் ஜாமின்கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. செப்.,30ல் முறைப்படி மனு செய்ய நீதிமன்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் , தேனி மருத்துவ கல்லுாரியில் ஆய்வு செய்தனர். மாணவர்களின் வருகை பதிவேட்டில், உதித்சூர்யா செப்.,12ல் கல்லுாரிக்கு வந்திருந்தார் என்பதற்கு 'பி'(பிரசன்ட்) என குறிப்பிட்டு, பின்னர் 'ஏ'(ஆப்சன்ட்) என மாற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
செப்.,18 ல் க.விலக்கு போலீசில் ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் அளித்த முதல்வர் ராஜேந்திரனிடம் நிருபர்கள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து, தேனி மருத்துவ கல்லுாரிக்கு வந்தது, உண்மையான உதித்சூர்யாவா அல்லது போலியான நபரா கேட்டதற்கு, போலியான நபர்தான் என கூறியிருந்தார். போலி நபர் குறித்த பயோ டேட்டா ஆதாரத்தையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனால் முதல்வரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் ஆள் மாறாட்டம் தொடர்பாக விசாரிக்க, கல்லுாரியில் முதல்வர் அமைத்த குழு முன் ஆஜராக, செப்., 14ல் கல்லுாரிக்கு உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் வந்திருந்தார். ஏற்கனவே பழக்கமானவர் என்பதால், அவரை தனது காரில் தேனிக்கு அழைத்து வந்தார் முதல்வர் ராஜேந்திரன்.அப்போது பின் தொடர்ந்து சிவப்பு டூவீல் வந்த நபர் குறித்தும், முதல்வர் அறையில் தன்னை மிரட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் குறித்தும், வீடியோ ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் முதல்வர் கொடுத்துள்ளார். அதுவும் விசாரிக்கப்பட உள்ளது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள சென்னை, கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் மூன்றுபேர், அவர்களின் பெற்றோர் இன்று காலை தேனி சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். அவர்களிடம் விசாரிக்கப்பட்டபின் , எஞ்சிய நான்கு மாணவர்கள், பெற்றோரிடம் விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், 'என்றன

மதுரை சிறைக்கு மாற்றம்

ஆள்மாறாட்டத்தில் மேலும் 7 பேர்

உயர் தொழில்நுட்ப மோசடி

வருகை பதிவில் குளறுபடி

3 மாணவர்களிடம் இன்று விசாரணை
சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள சென்னை, கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் மூன்றுபேர், அவர்களின் பெற்றோர் இன்று காலை தேனி சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். அவர்களிடம் விசாரிக்கப்பட்டபின் , எஞ்சிய நான்கு மாணவர்கள், பெற்றோரிடம் விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், 'என்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக