திங்கள், 23 செப்டம்பர், 2019

அமெரிக்காவில் மோடி ... காஷ்மிரில் எழுபது லட்சம் மக்கள் வதைக் கூடத்தில் ... வரலாறு கூறும் நீங்கள் யாரென்று !


Subaguna Rajan : இந்திய பனியா முதலீட்டியம் என்னவெல்லாம் செய்ய முடியுமென்பதற்கான சாட்சி/ காட்சி ஹூஸ்டன் நகரில். மோடி எனும் பாசிச மனநோயாளிக்கு வழங்கப்படும் வரவேற்பு, மோடியை விட இந்திய அமெரிக்க சமூகமெனக் கூத்தாடும் கூட்டத்தின் மீதே மிக கேவலமான மதிப்பீட்டை உருவாக்குகிறது.
நாம் ஒருபோதும் இந்திய தேசாபிமானக்கார்ர்கள் கிடையாது. இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் மீது எந்தவித கோபாவேசமும் கிடையாது. ஆனால் அங்கே உட்கார்நது கொண்டு ‘ஜெய்ஹோ ‘ ‘ஜெய்ஶ்ரீராம் ‘ கோஷம் போடுபவர்கள் மனித விரோதிகள் என்பதில் ஐயமில்லை. இவர்கள் வாய்ப்புத் தேடி ஓடியதில் பிழையில்லை. தாங்கள் உதறிவிட்டு , மூச்சுத் திணறுகிறது என துறந்து விட்ட தேசத்தின் மக்களை இன்னும் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியை எந்தவித மனவிலக்கமுமின்றி கொண்டாடுவோரும், அந்த மனிதனின் மனநிலையைப் பகிர்ந்து கொள்கிறவர்களே. அதாவது அங்கே கூட்டத்திலமர்ந்து உற்சாக ஓசை எழுப்புவோரும் பாசிசத்தின் காதலர்களே.
2001 குஜராத் கொலைகளின் காரணர் என்ற கருத்தை ஏற்று பத்தாண்டுகள் அமெரிக்க மண்ணில் கால்பதிக்க அனுமதி மறுக்கப்பட்டவர் இந்த மோடி என்பதை அமெரிக்க வலதுசாரிகளும், அமெரிக்க இந்திய இந்துத்துவ வெறியர்களும் மறந்து போனதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அமெரிக்காவின் அழிவுவேலை மோடியை விஞ்சுவதுதான் எனும் போது, ட்ரப்ம்பும் மோடியும் ஜோடி போடுவது பொருத்தம்தான்.

இது மோடிக்கான ‘காட்சி ‘ ( Show ) மட்டுமல்ல , இந்திய அமெரிக்க சமூகம் தன்னை அமெரிக்க அரசியல் களத்தில் ஒரு அழுத்தம் கொண்ட குழு என்பதை நிருபிக்கும் வேலையும்தான். இந்த நிகழ்ச்சியை 154 இந்திய அமெரிக்க நிறுவனங்கள் ஒருங்கிணைப்பதாக செய்தி . இந்திய அமெரிக்க சமூகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கே பெரிய நிதி நல்கை வழங்கும் சமூகமாக மாறி இருக்கிறது. எனவே இது அவர்களது நகர்வினை அடிப்படையாக கொண்டதும் கூட .
Nauseating என்ற சொல்லால் மட்டுமே இந்த நிகழ்வை வர்ணிக்க முடியும். ஐயா, அமெரிக்க வாழ் இந்திய பிழைப்புவாதிகளே, நீங்கள் வாழ எதையும் செய்வீர்களென்பது ஏற்கனவே நூறு முறை நிரூபிக்கப்பட்டதுதான் . தொலையுங்கள் .
இங்கே காஷ்மிரில் எழுபது லட்சம் மக்களை வதைக் கூடத்தில் அடைத்து விட்டு இந்த மனநோயாளி வந்திருக்கிறார் . பள்ளிக் குழந்தைகள் வகுப்பறைக்குச் சென்று ஐம்பது நாட்கள் ஆகி விட்டது . 2001 ஐ போலவே ஒரு பயங்கரமான குற்றவாளியாகவே மோடி வந்திருக்கிறார் .
கொண்டாடுவதில் பிழையில்லை . ஆனால் கொண்டாடும் காலமும் , சூழலும் கொடுரமாக இருக்கிறது . ரத்தக்கறை படித்த கரங்களை பற்றித் தழுவி உங்களுக்கான பங்கினைப் பெற்றுக் கொள்ளுங்கள். காலம் ஒருநாள் கணக்கு தீர்க்கும் முறை வரும் போது உங்கள் கரங்களின் கறைகளும் கணக்கில் கொள்ளப்படும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் .

கருத்துகள் இல்லை: