

டாக்கின்ஸுக்கு இணையானவரா? அவருக்கு வழங்கிய விருதினை வழங்குகிறார்களாமே?" என்று ஒருவர் என்னைக் கேட்டார்.
"சமூக அளவிலும், மனிதநேயத்திற்காகவும் ரிச்சர்ட் டாக்கின்ஸைவிட மிகமிகக் கூடுதலாக சாதித்தவர் எங்கள் ஆசிரியர்" என்றேன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு 'மனிதநேய வாழ்நாள் ெற்றார்' என்பதை வெறும் செய்தியாகத்தான் குறிப்பிடுகிறோமேயன்றி, ஏதோ டாக்கின்ஸ் வாங்கிய விருதினை ஆசிரியர் வாங்குவதே ஆசிரியருக்குப் பெருமை என்றுப் பொருளல்ல. இதை முதலில் நம்மவர்களே நினைவில்கொள்ளவேண்டும்.
சாதனையாளர் விருது' வழங்கப்படும் செய்தியைப் பற்றி எழுதும்போது, 'இதற்கு முன்பு அந்த விருதினை 1996ஆம் ஆண்டு பிரபல நாத்திக அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ப
இப்படி நான் சொல்வது ரிச்சர்ட் டாக்கின்ஸை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல.
உலகம் போற்றும் பேரறிஞர் அவர். ஆனால் இங்கர்சால் தொடங்கி, டாக்கின்ஸ் வரை பெரும்பாலான சர்வதேச நாத்திகச் சிந்தனையாளர்கள் சிந்தனை தளத்தோடு தங்கள் பங்களிப்பை சுருக்கிக்கொண்டவர்கள்தான்.
ஆனால் நம் திராவிட பெருந்தலைகளான தந்தை பெரியாரோ, அண்ணாவோ, கலைஞரோ வெறும் அறிவாளிகள் மாத்திரமல்ல, களப்போராளிகளும்கூட. ஒருபுறம் சிந்தனைத்துறையில் ஈடுபட்டுக்கொண்டே, மறுபுறம் அந்த சிந்தினைகளை மக்களிடையே பரப்புவதற்கும், சட்டங்களாக செயல்படுத்துவதற்கும் மாபெரும் மக்கள் இயக்கங்களைக் கண்டு அதற்கு தலைமை வகித்தவர்கள் அவர்கள்.
வறட்டு நாத்திகத்தைக் கடந்த மனிதநேய அரசியல் தத்துவங்களை முன்வைத்து, அத்தத்துவங்களைக் கொண்டு 8கோடிப் பேர் உள்ள ஒரு தேசிய இனத்தையே 50ஆண்டுகளாக பண்படுத்திவரும் வித்தை புரிந்தவர்கள் அவர்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் நம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
ஆக எப்போதும் உலகின் தலைசிறந்த மனிதநேய செயற்பாட்டளர்களாக திராவிட இயக்கத் தலைவர்களே இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நாத்திக உலகின் மிகப் பெரிய தலைவர் யார் என்றால், அது ஏறத்தாழ 70ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு, உலகின் மிக முக்கியமான நாத்திக இயக்கம் ஒன்றின் தலைவராக இருந்து, இந்திய துணைக்கண்டத்தின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளுள் ஒன்றாக விளங்கும் ஆசிரியர் வீரமணி அவர்களாகத்தான் இருக்கமுடியும்.
இந்த விருது நிச்சயமாக ஆசிரியருக்கு பெருமை. அந்தப் பெருமைக்கு காரணம் இது அவரது ஓயாத பொதுவாழ்வுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியான உலக அங்கீகாரம் என்பதுதானே தவிர, ரிச்சர்ட் டாக்கின்ஸ் வாங்கிய விருதினை அவர் வாங்குகிறார் என்பதல்ல. வேண்டுமானால் ஆசிரியர் வாங்கிய விருதினை தான் முன்கூட்டியே வாங்கிவிட்டதைக் குறித்து ரிச்சர்ட் டாக்கின்ஸ் பெருமைப்படலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக