tamil.oneindia.com - hemavandhana:
சென்னை:
மதுரையில் பிரமாண்ட மாநாட்டை கூட்டுகிறார்.. கட்சியை அங்கு வைத்துத்
தொடங்குகிறார்.. அடுத்த ஆண்டு பொங்கல் "போக்கிரி ராஜா" பொங்கலாக மலர
போகிறது.. இதுதான் ரஜினி ரசிகர்களிடையே நிலவும் இன்னொரு பரபரப்பு.
ரஜினி தரப்பில் திடீரென அரசியல் விவகாரங்கள் திடீர் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது. அரசியலுக்கு வரப் போறேன்னு சொல்லியே 2 வருடமாகி விட்டது. இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.
கட்சி ஆரம்பிப்பது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலாகவே பதிலளித்து வந்தார் ரஜினி. இந்த நிலையில் திடீரென பிரஷாந்த் கிஷோருடன் ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார்.
இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ரஜினி தரப்பில் என்ன கூறுகிறார்கள் என்றால்.. ரஜினி கட்சி தொடங்க தயாராகி விட்டார். எல்லாம் ரெடியான பின்னர் கட்சி தொடங்கவே அவர் விரும்பினார். அவர் விரும்பியபடி தற்போது கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. இதையடுத்து பிரஷாந்த் கிஷோருடனும் அவர் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.
கட்சியை பிரமாண்டமான முறையில் மக்களிடம் அறிமுகம் செய்து வைக்க ரஜினி விரும்புகிறார். இதற்காக அவர் மதுரையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மதுரை அரசியலுக்கு மிகவும் சென்டிமென்ட்டான ஒரு நகரம். எம்ஜிஆருக்கு மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது மதுரைதான். எம்ஜிஆர் மட்டுமில்லை.. விஜயகாந்த்தும் இங்குதான் கட்சியை ஆரம்பித்தார். கமலும் இங்குதான் கட்சியை ஆரம்பித்தார். அதனால்தானோ என்னவோ, ரஜினியும், மதுரையை தேர்ந்தெடுத்துள்ளார்.
அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி. இதில்தான் தனது கட்சியை அறிவிக்கப் போகிறார். அதன் பிறகு அவரது அரசியல் பயணம் அதிரடியாக இருக்கும். வரும் சட்டசபைத் தேர்தலில் ஏற்கனவே கூறியபடி 234 தொகுதிகளிலும் ரஜினி கட்சி தனித்துப் போட்டியிடும். ரஜினி ஏற்கனவே சொன்னபடி சிஸ்டத்தை சரி செய்யும் வகையிலான திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவுள்ளார். மக்களைக் கவரும் வகையிலான, மக்களுக்கான, ஆன்மீகஅரசியலை ரஜினி முன்னெடுப்பார் என்று கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் ரஜினி ஒரு வழியாக சுறுசுறுப்பாகப் போகிறார்.. ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக